டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இப்போதெல்லாம் படத்துக்கு பூஜை போடும்போதே பவர் ஸ்டாருக்கு போன் போட்டு விடுகிறார்கள். அவர் தலைகாட்டினால் போதும், அவர் முகத்தை காட்டியே படத்தை ஓட்டிவிடலாம் என்று நம்புகிறார்கள். அதுவும் அயிட்டம் கேர்ள் போன்று நடனம் ஆடவும் அழைக்கிறார்கள். இப்போது ஒரு திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்தின் பெயர் "காந்தாரி". ஒரு வீட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் காதலர்கள் அந்த வீட்டில் உள்ள பேய்களால் படும் அவஸ்தைகள்தான் கதை. சாட்டை யுவன் ஹீரோ, இசா, பிரதிக்ஷா ஹீரோயின்கள். எம்.கே.குமார் என்பவர் இயக்குகிறார். நடிகரான பவர் ஸ்டார் அந்த வீட்டில் நடக்கும் சினிமா ஷூட்டிங்கில் நடிக்க வருகிறார். அவர் பேயிடம் மாட்டிக் கொண்டு எப்படி திண்டாடுகிறார் என்பது அவரின் காமெடி போர்ஷன். ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம். 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.