Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொலவெறி அனிருத்துக்கு ரஜினி நறுக் அட்வைஸ்!

16 மார், 2013 - 13:02 IST
எழுத்தின் அளவு:

மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் 3. இந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இவர் லதா ரஜினியின் உறவினர். முதல் படத்திலேயே இவர் மெட்டெடுத்த ஒய்திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் ஹிட் ஆனதால் அனைவருமே அனிருத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். அதோடு, அடுத்த ஏ.ஆர்.ரகுமான் இவர்தான் என்றெல்லாம்கூட சிலர் அவருக்கு கீ கொடுத்தனர். இதனால் அனிருத்துக்கும் அடுத்த ரகுமான் நாம்தான் என்ற எண்ணம் உச்சந்தலையில் ஏறி விட்டதாம். அந்த நெனப்புடனேதான் அதன்பிறகு தான் இசையமைத்த படங்களுக்கும் ஒர்க் பண்ணி வந்திருக்கிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் ரஜினியின் வீட்டுக்கு அனிருத் சென்றிருந்தபோது, இசையமைத்துக்கொண்டிருக்கும் படங்களைப்பற்றி கேட்டறிந்தாராம். அப்போது, எதிர்காலத்தில் இசையில் யாரை மாதிரி வர வேண்டும் என்று ரஜினி ஒரு கேள்வி வீச, ஏ.ஆர்.ரகுமான் மாதிரி வரனும்னு ஆசை உள்ளது என்றாராம். அதைக்கேட்டு, அவரை மேலும் கீழும் பார்த்த ரஜினி, ரகுமான் சினிமாவுக்கு வந்து ரொம்ப வருடமாகி விட்டது. ஆனால் இன்று வரை அவரைப்பற்றி மீடியாக்களில் எந்த தவறான செய்தியும் வந்ததில்லை. காரணம், தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருபபார். அதனால்தான் இத்தனை பெரிய வெற்றியை அவரால் அடைய முடிந்தது. ஆனால் நீ முதல் படத்துக்கு இசையமைக்கும்போதே நடிகையுடன் உன்னை இணைத்து தவறான செய்திகளும், போட்டோக்களும் வருகிறது.

மனசு நிறைய பெரிய ஆசையை வைத்துக்கொண்டு, நடிகைங்க பின்னாடி சுத்தினா எப்படி பெரிய ஆளா வர முடியும் என்று நறுக்கென்று சொன்னாராம். அதைக்கேட்டு ஆடிப்போன அனிருத். இனிமேல் நல்ல புள்ளையா இருந்து சினிமாவுல பெருசா சாதிப்பேன் என்று ரஜினியிடம் சொல்லிவிட்டு வந்தாராம்.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

mani - karur  ( Posted via: Dinamalar Android App )
17 மார், 2013 - 20:18 Report Abuse
mani சூப்பர் தலைவா
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
17 மார், 2013 - 13:11 Report Abuse
Vaal Payyan ரஜினிக்கு ஏன் இந்த கொலைவெறி ..
Rate this:
SaS - Dubai  ( Posted via: Dinamalar Android App )
17 மார், 2013 - 12:32 Report Abuse
SaS இசைப்புயலின் நிகரற்ற குணத்தி்ற்கு ஒரு எடுத்துகாட்டு..!
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
17 மார், 2013 - 09:46 Report Abuse
itashokkumar ஒருவரை பார்த்தாலே சொல்லிவிடலாம் இது நம்ம தலையில் குப்பையை கொட்டுமா கொட்டாதா என்று.
Rate this:
Pandian - Dallas,யூ.எஸ்.ஏ
17 மார், 2013 - 05:40 Report Abuse
Pandian அட்வைஸ் மத்தவங்களுக்கு மட்டும் தான். இவர் எப்படி இருந்தார் என்று கொஞ்சம் யோசித்து பார்க்கட்டும்
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
17 மார், 2013 - 11:46Report Abuse
itashokkumarஎன்ன அப்படி சொல்லிட்டிங்க அவரு எத்தனையோ ஜாதகம் பார்த்து கல்யாண மாலையிலே எல்லாம் பதிவு பண்ணித்தான் திருமணம் புரிந்தார் அவருடைய குழந்தைகளும் அப்படியே....
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in