ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நான் யாருடனும் போட்டி போடவில்லை; பொதுவாகவே நடிகைகளுக்குள் போட்டியோ, பொறாமையோ இல்லை, என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன், சமந்தாவுடன் நடிகை அஞ்சலி சண்டை என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து அஞ்சலி அளித்துள்ள பேட்டியில், நானும் ஸ்ருதி ஹாசனும் பெஸ்ட் ப்ரெண்ட். ஸ்ருதி, நடிகர் கமலின் மகள் என்ற பந்தா இல்லாமல் பழகுகிறார். அவரிடம் நிறைய விசயங்கள் தெரிஞ்சுக்கலாம். சமந்தா உடன் சண்டை என்று எழுதுகின்றனர். அவரே ஒரு பேட்டியில் என்னோட ரசிகை என்று கூறியிருக்கிறார். இதனால் இரண்டு கதாநாயாகிகள் கதாபாத்திரம் என்றால் ஆர்வத்துடன் நடிக்கிறேன். நான் யாருடனும் போட்டியோ, சண்டையோ போடவில்லை, என்று கூறியுள்ளார்.