ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
3 படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுசுக்கு அதன்பிறகு படவாய்ப்பில்லை. இருப்பினும், அடுத்தடுத்து இயக்கப்போகும் படங்களுக்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டிருந்தார். மேலும், தனது அடுத்த படத்திலும் கணவர் தனுஷையே அவர் நடிக்கக்கேட்டபோது, இரண்டாவது படத்தை வேறு நடிகரை வைத்து இயக்குமாறு கேட்டக்கொண்ட தனுஷ், அதற்கடுத்த படத்தில் தான் நடிப்பதாக சொன்னாராம். அதனால் தனது இரண்டாவது படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்து வந்த ஐஸ்வர்யா, இப்போது மணிரத்னத்தின் கடல் படத்தில் நடித்த கார்த்திக்கின் மகன் கவுதமை நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளாராம். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.
இதற்கான கதையை அவர் சொன்னதும் மகன் நடிப்பதற்கு பச்சைக்கொடி காட்டி விட்டாராம் கார்த்திக். இதற்கிடையே கும்கி படத்தை இயக்கிய பிரபுசாலமனும் தனது அடுத்த படத்துக்கு கவுதமைத்தான் கேட்டிருக்கிறாராம். ஆக, இவ்விரு படங்களில் நடிக்க மட்டுமே தற்போது முடிவெடுத்துள்ள கவுதமுக்கு, தெலுங்கில் இருந்தும் வாய்ப்பு வருகிறதாம். ஆனால், தமிழில் ஒரு பெரிய ஹிட் கொடுத்த பிறகுதான் அந்நிய மொழிகளில் நடிப்பேன் என்று வந்த வாய்ப்புகளை திருப்பி அனுப்பி விட்டாராம்.