Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இலங்கை விவகாரம்! போராடும் மாணவர்களுக்கு சிம்பு ஆதரவு!

15 மார், 2013 - 14:09 IST
எழுத்தின் அளவு:

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் கல்லூரி மாணவர்களுக்கு நடிகர் சிம்பு ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் பந்தலுக்கு சென்ற சிம்பு, அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, மனதை தளரவிடாமல் தைரியமாக இருங்கள் என ஆறுதலும் கூறியுள்ளார்.

மாணவர்களிடையே சிம்பு பேசுகையில், நானும் ஒரு தமிழ் பையன்தான். எனக்கும் தமிழுணர்வு இருக்கிறது என்பதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறேன். மற்றவர்கள் முன்னாடி பேர் வாங்கணும் என்பதற்காக நான் இங்கு வரவில்லை. அந்த பேரை நான் நன்றாக சம்பாதித்து வைத்திருக்கிறேன். மாணவர்கள் என்றால் படம் பார்ப்போம், ஜாலியாக இருப்போம், நல்லா சுத்துவோம் என்கிற கருத்துதான் சமுதாயத்தில் இருக்கிறது. ஒரு முக்கியமான விஷயத்துக்கு மாணவர்களாலும் குரல் கொடுக்கமுடியும் என்று சொல்லும் அளவுக்கு நீங்கள் எல்லாம் இந்த போராட்டத்தில் களமிறங்கியுள்ளது சந்தோஷமாக உள்ளது. எனவே, நானும் ஒரு தமிழனா இருந்து உங்கள் எல்லோருக்கும் ஆதரவா இருக்கணும் என்பதற்காகத்தான் இங்கு வந்தேன். ஆகவே, மனதை தளரவிடாதீர்கள். கண்டிப்பா ஒரு நல்ல விஷயம் நடக்கும்னு நினைக்கிறேன். சின்னதா நடக்குற ஒரு விஷயம்தான் நாளைக்கு பெரிசா மாறும். என்னுடைய ஆதரவு உங்களுக்கு என்றைக்குமே உண்டு. தைரியமாக இருங்கள், என்றார்.

Advertisement
கருத்துகள் (44) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (44)

G Anbu Anbu - thondi,இந்தியா
06 ஜூன், 2013 - 12:21 Report Abuse
G Anbu Anbu உண்மையான போராட்டம் தான இல்லை இது வெறும் விளம்பரம் தான சிம்பு
Rate this:
RAMS - BRISBANE,ஆஸ்திரேலியா
19 மார், 2013 - 11:19 Report Abuse
RAMS சூப்பர் சிம்பு . நன்றி
Rate this:
Narasimhan - Chennai  ( Posted via: Dinamalar Android App )
17 மார், 2013 - 00:27 Report Abuse
Narasimhan எதி்ர்பார்க்கவில்லை சிம்பு மனமார்ந்த நன்றி நீங்கள் ஓர் முன் உதாரணம் மற்ற நடிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு... pls continue............
Rate this:
அ.பிரபு - தொழுதூர்  ( Posted via: Dinamalar Android App )
16 மார், 2013 - 18:40 Report Abuse
அ.பிரபு நன்றி சிம்பு எப்போதும் உங்கள் ரசிகன் . மற்ற நடிகர் எல்லம் ஏன் கலந்து கொள்ள வில்லை ? சம்பாதி்ச்சிக் கொள்ளமட்டும் தமிழ் ரசிகர் (மக்கள் ) வேண்டுமா ?
Rate this:
shyamdev - chennai  ( Posted via: Dinamalar Android App )
16 மார், 2013 - 13:40 Report Abuse
shyamdev great simbu
Rate this:
மேலும் 39 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in