பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
தமிழில், "யாவரும் நலம், தீராத விளையாட்டுப் பிள்ளை போன்ற படங்களில் நடித்தவர், வடக்கத்திய வரவு நீத்து சந்திரா. அதன்பின், கதாநாயகி வாய்ப்பு கிடைக்காததால், மிஷ்கின் இயக்கிய, "யுத்தம் செய் படத்தில் "கன்னித்தீவு பொண்ணா என்ற பாட்டுக்கு நடனமாடி, கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்தார்.பின்னர், "ஆதிபகவன் படத்தில் "ஜெயம் ரவியுடன் நடித்தார். அப்படத்தில், நெகடிவ் ரோலில் நடித்ததுடன், ஹாலிவுட் நடிகைகளைப் போல், எகிறி குதித்து பைட் செய்தார். ஆனபோதும், அடுத்த படியாக கதாநாயகி வாய்ப்பு நீத்துவுக்கு கிடைக்கவில்லை. அதனால், ஆர்யா நடிக்கும், "சேட்டை படத்தில் ஒரு பாட்டுக்கு அவருடன் நடனமாடியுள்ளாராம். பார் செட்டப்பில் படமாக்கப்பட்ட பாடல் என்பதால், "கிக்கான ஆட்டமாடியுள்ளாராம் நீந்து சந்திரா.