வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
"சுந்தர பாண்டியன், கும்கி படங்களில், லட்சுமி மேனனின் நடிப்புக்கு, பாராட்டுகள் குவிந்தன. இதைத் தொடர்ந்து, "மஞ்சப்பை, குட்டிப் புலி ஆகிய படங்களில் நடிக்க, ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், "முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தால் தான், நம்பர் ஒன் இடத்துக்கு வர முடியும் என, அவரிடம் யாரோ கூற, அதை, கபக்கென பிடித்துக் கொண்டார், லட்சுமி மேனன்.முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்காக, பிரபல இயக்குனர்களை சந்தித்து, வாய்ப்பு கேட்டு வருகிறாராம். "குடும்ப பாங்கான வேடத்தில் தான் நடிப்பேன் என, பிடிவாதம் பிடித்தால், முன்னணி ஹீரோக்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்காது. கிளாமருக்கு பச்சைக் கொடி காட்டினால் தான், கோலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்ட முடியும் என, அவருக்கு சிலர் யோசனை கூறியுள்ளனர். இதனால், அதுபற்றி, தீவிரமாக யோசித்து வருகிறாராம், லட்சுமி மேனன்.