'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
"கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில், சந்தானம் வகையறாக்களுக்கு லட்டு கொடுத்த, விசாகா சிங், ஏற்கனவே, "பிடிச்சிருக்கு படத்தின் மூலம், தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான். அதற்கு பின், கோலிவுட் கதவு, விசாகாவுக்காக திறக்கவில்லை.இதனால், கன்னடம், இந்தி படங்களில் கவனம் செலுத்தினார்.
இந்தியில், பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், குறிப்பிட்ட இடைவெளியில், தொடர்ச்சியாக, அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. இப்போது கூட, மூன்று இந்தி படங்களில் நடித்து வருகிறார். அடுத்தபடியாக, அஜீத்துடன் நடிக்கும், ஜாக்பாட், இவருக்கு அடித்துள்ளது. "சிறுத்தை பட இயக்குனர் சிவா, அஜீத்தை வைத்து, அடுத்த இயக்கவுள்ள படத்தில், விசாகா சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். இதில், இவருக்கு ஹீரோயின் வேடமா அல்லது குத்தாட்ட பாடலுக்கு நடனமாடப் போகிறாரா என்ற விவரம், இன்னும் தெரியவில்லை. அஜீத்துடன் நடிக்கும் உற்சாகத்தில் திளைக்கிறார், விசாகா சிங்.