விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
சமீபகாலமாக காமெடி கதைகளே பெரும்பாலும் வெற்றி பெற்று வருவதால், காமெடியன்களுக்கெல்லாம் கொண்டாட்ட காலமாகி விட்டது. கீழ்மட்டம், மேல்மட்டம் என அனைத்து ரக காமெடியன்களும் நாமும் ஹீரோ அரிதாரம் பூசி பார்ப்போமே என்று களத்தில் இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில், மன்னார் வளைகுடா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் கஞ்சாகருப்பு. ஆனால் அந்த படமும் இதோ வருகிறது அதோ வருகிறது என்கிறார்கள். ஆனால் இன்றுவரை வந்தபாடில்லை. இந்த நிலையில், சொந்தமாக ஒரு பட நிறுவனத்தை தொடங்கியுள்ள கஞ்சாகருப்பு, வேல்முருகன் போர்வெல்ஸ் என்றொரு படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
இதேபடத்தில் இன்னொரு ஹீரோவாக அங்காடித்தெரு மகேஷ் நடிக்கிறார். கரண் நடித்த மலையன் படத்தை இயக்கிய கோபி இயக்கும் இப்படத்தில் அழகன் அழகி படத்தில் நடித்த ஆருஷி நாயகியாக நடிக்கிறார். வருகிற 14-ந்தேதி பூஜை போடப்பட்டு, அதைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறதாம். இந்தநேரத்தில், இப்படத்தை தயாரிப்பது கஞ்சா கருப்பு என்று சொல்லிக்கொண்டாலும், அவர் வெறும் பினாமிதான். அவருக்குப்பின்னாடி வேறொரு தயாரிப்பாளர் இருக்கிறார் என்று செய்தி பரவியுள்ளது.
ஆனால் இதுகுறித்து கஞ்சா கருப்புவைக்கேட்டால், நான் பினாமியும் இல்லை சுனாமியும் இல்லீங்க. என் சொந்த பணத்துலதான் இந்த படத்தை தயாரிக்கிறேன். ஒரு நல்ல கதையில கதையின் நாயகனா நடிக்கனுங்கிற ஆசை ரொம்ப நாளா இருந்துச்சி. மலையன் கோபி சொன்ன கதை பிடிச்சதால அந்த படத்தை நானே தயாரிக்க முடிவு செஞ்சிட்டேன். இந்த படம் என்னை வேறு கோணத்துல காட்டும். அதேசமயம் காமெடிக்கும் பஞ்சம் வைக்கல. காமெடியன், கதையின் நாயகன் என இரண்டு பக்கமும் புகுந்து விளையாடப்போறேன் என்கிறார்.