ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தமிழ் சினிமாவில் எதிர்பாராமல் வெற்றியடைந்த பீட்சா படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. அதில் ஹீரோ,ஹீரோயின்களாக வைபவ்வும், சஞ்சிதா ஷெட்டியும் நடிக்கின்றனர். கார்த்திக் சுபுராஜ் என்ற குறும்பட இயக்குனர் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த படம் பீட்சா. விஜய் சேதுபதி ஹீரோவாகவும், ரம்யா நம்பீசன் ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளனர்.
முதல்படத்தை தயாரித்த திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது. ஆனால் படத்தின் டைரக்டர், ஹீரோ, ஹீரோயின்கள் அனைவரையும் மாற்றியுள்ளனர். சரோஜா, மங்காத்தா படங்களில் நடித்த வைபவ் ஹீரோவாகவும், தில்லாலங்கடி, கொள்ளைக்காரன் படங்களில் நடித்த சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். தீபன் சக்கரவர்த்தி என்று மற்றொரு குறும்பட இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார். படத்திற்கு பீட்சா-2 தி வில்லா என்று பெயர் வைத்துள்ளனர். சந்தோஷ் நாரயணனே இப்படத்திற்கும் இசையமைக்கிறார். அடுத்தமாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.