கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! | நஸ்ரியாநசீமுக்கு தமிழ் வசனங்களை புரிய வைத்த ஜெய்! | சீரியலிலும் புரட்சி செய்யப்போகிறார் பாரதிராஜா! |
கவர்ச்சி என்பதை மூலதனமாக வைத்தே இன்றுவரை கோடம்பாக்கத்தில் வண்டியோட்டி வருபவர் ஹன்சிகா. ஆனால் அவரோ, தற்போது தான் பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்டாகி விட்டதாக அடிக்கடி ஞாபகப்படுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, கதை சொல்லும் இயக்குனர்களிடமும், மொத்த கதையையும் கேட்டு விட்டு, தனது கேரக்டரை தனியாக பிரித்து, இதில் நான் நடிப்பதற்கு எந்தெந்த காட்சிகளில் வாய்ப்பு உள்ளது என்று விளக்கம் கேட்கிறாராம். அதையடுத்து டைரக்டர்கள் கொடுக்கும் விளக்கம் அவருக்கு திருப்தி கொடுத்தால் மட்டுமே அப்படத்தை ஏற்றுக்கொள்கிறாராம். அந்த அளவுக்கு தான் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் காட்டிக்கொள்கிறார் ஹன்சிகா.
இதேபோல்தான், டெல்லி பெல்லி ரீமேக்கான சேட்டை படத்தில் நடிக்க வேண்டுமென்று இயக்குனர் கண்ணன் சொன்னபோதும், அதிர்ச்சியடைந்து விட்டாராம் நடிகை. ஏன் என்ன காரணம்? இன்னும் நான் கதையே சொல்ல ஆரம்பிக்கவில்லையே? என்று இயக்குனர் சொன்னபோது, அந்த படத்தைதான் நான் இந்தியில் பார்த்திருக்கிறேனே. அதனால்தான் கேட்பதற்கு முன்பே இவ்வளவு அதிர்ச்சி என்றாராம். ஆபாசம் வசனம் மட்டுமின்றி, ஆபாச காட்சிகள் நிறைந்த படம் அது. அதில் நான் நடித்தால் தமிழ் கலாச்சாரத்தை சீரழிப்பது போல் இருக்குமே என்று மறுத்தாராம் ஹன்சிகா. அதையடுத்து, தமிழ் பதிப்புக்காக தான் செய்த மாற்றங்களை அவருக்கு சீன் பை சீன் சொன்ன பிறகே நடிக்க சம்மதித்தாராம் ஹன்சிகா. குறிப்பாக ஆர்யாவுடனான உதட்டு முத்தக்காட்சியில்கூட கன்னியமாகத்தான் நடிப்பேன் என்று கேட்டுக்கொண்டாராம் ஹன்சிகா.
ஆனால் பின்னர் ஸ்பாட்டுக்கு வந்தபிறகுதான். படத்தில் ஏதாவது ஒரு ஸ்பெசல் இருக்க வேண்டுமென்று, டெல்லி பெல்லிக்கு இணையாக உதட்டு முத்தக்காட்சியில் புகுந்து விளையாடி விட்டாராம் ஆர்யா.