Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்க மாட்டேன்! புல்லரிக்க வைக்கிறார் ஹன்சிகா மோத்வானி!

I will never collapse tamil culture says hansikaகவர்ச்சி என்பதை மூலதனமாக வைத்தே இன்றுவரை கோடம்பாக்கத்தில் வண்டியோட்டி வருபவர் ஹன்சிகா. ஆனால் அவரோ, தற்போது தான் பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்டாகி விட்டதாக அடிக்கடி ஞாபகப்படுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, கதை சொல்லும் இயக்குனர்களிடமும், மொத்த கதையையும் கேட்டு விட்டு, தனது கேரக்டரை தனியாக பிரித்து, இதில் நான் நடிப்பதற்கு எந்தெந்த காட்சிகளில் வாய்ப்பு உள்ளது என்று விளக்கம் கேட்கிறாராம். அதையடுத்து டைரக்டர்கள் கொடுக்கும் விளக்கம் அவருக்கு திருப்தி கொடுத்தால் மட்டுமே அப்படத்தை ஏற்றுக்கொள்கிறாராம். அந்த அளவுக்கு தான் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் காட்டிக்கொள்கிறார் ஹன்சிகா.

இதேபோல்தான், டெல்லி பெல்லி ரீமேக்கான சேட்டை படத்தில் நடிக்க வேண்டுமென்று இயக்குனர் கண்ணன் சொன்னபோதும், அதிர்ச்சியடைந்து விட்டாராம் நடிகை. ஏன் என்ன காரணம்? இன்னும் நான் கதையே சொல்ல ஆரம்பிக்கவில்லையே? என்று இயக்குனர் சொன்னபோது, அந்த படத்தைதான் நான் இந்தியில் பார்த்திருக்கிறேனே. அதனால்தான் கேட்பதற்கு முன்பே இவ்வளவு அதிர்ச்சி என்றாராம். ஆபாசம் வசனம் மட்டுமின்றி, ஆபாச காட்சிகள் நிறைந்த படம் அது. அதில் நான் நடித்தால் தமிழ் கலாச்சாரத்தை சீரழிப்பது போல் இருக்குமே என்று மறுத்தாராம் ஹன்சிகா. அதையடுத்து, தமிழ் பதிப்புக்காக தான் செய்த மாற்றங்களை அவருக்கு சீன் பை சீன் சொன்ன பிறகே நடிக்க சம்மதித்தாராம் ஹன்சிகா. குறிப்பாக ஆர்யாவுடனான உதட்டு முத்தக்காட்சியில்கூட கன்னியமாகத்தான் நடிப்பேன் என்று கேட்டுக்கொண்டாராம் ஹன்சிகா.

ஆனால் பின்னர் ஸ்பாட்டுக்கு வந்தபிறகுதான். படத்தில் ஏதாவது ஒரு ஸ்பெசல் இருக்க வேண்டுமென்று, டெல்லி பெல்லிக்கு இணையாக உதட்டு முத்தக்காட்சியில் புகுந்து விளையாடி விட்டாராம் ஆர்யா.

Tags »
hansika, ஹன்சிகா,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (6)

VELMURUGAN.B - vembathur,sivagangai.,இந்தியா
2013-03-06 13:14:50 Report Abuse
VELMURUGAN.B I LOVE YOU
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
tamilan - madurai,இந்தியா
2013-03-05 22:52:51 Report Abuse
tamilan போடி போடி
Rate this:
2 members
0 members
0 members
Share this comment
ஸ்ரீவி-ஜெய் - Srivilliputtur ,இந்தியா
2013-03-05 21:54:58 Report Abuse
ஸ்ரீவி-ஜெய் உன்னை மாதிரி ஆளுங்கதான் தமிழ்நாட்டுக்கு தேவை
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
sivapraveen - Mumbai,இந்தியா
2013-03-05 21:52:00 Report Abuse
sivapraveen சம காமெடி மா நீ
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Vaal Payyan - Chennai,இந்தியா
2013-03-05 16:06:47 Report Abuse
Vaal Payyan தமிழ் கலாச்சாரமா அது செத்து போய் பல வருஷம் ஆச்சி .... படம் பேரே சேட்டை ... இதுல்ல நீங்க ஆர்யா லிப் லாக் ... அதுக்கு மேல காப்பாத்த போறீங்களா ... ஐயோ ஐயோ ... போ ஹன்சு ...
Rate this:
3 members
2 members
35 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in