Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

75 லட்சம் கேட்டு படாதிபதிகளை மிரட்டும் கருணாஸ்!

05 மார், 2013 - 11:02 IST
எழுத்தின் அளவு:

லொடுக்குப்பாண்டி கருணாசுக்கு அப்படியொன்றும் பெரிதாக மார்க்கெட் இல்லை. காமெடியன் பட்டியலிலேயே பின்தங்கிதான் இருந்தார். அந்த நேரம் பார்த்து ஹீரோ ஆசை ஏற்பட, இரண்டு படங்களில் நடித்தார். இரண்டுமே சுமாராகத்தான் ஓடியது. விளைவு, ஒரே நேரத்தில் மூன்று , நான்கு படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதோடு, நான் எதிர்பார்க்கிற மாதிரியான கதைகள் அமையவில்லை. அப்படி கிடைத்தால் வருடத்துக்கு 10 படங்களில்கூட கதாநாயகனாக நடிப்பேன் என்றும் செம பில்டப் கொடுத்து வருகிறார் மனிதர்.

இந்த நிலையில், அவரது நடிப்பில் தற்போது சந்தமாமா என்ற படம் வெளியாகியுள்ளது. இந்த படம் பெரிதாக ஒன்றும் ரசிகர்களை கவரவில்லை. இருப்பினும் முகத்தில் எந்த அதிர்ச்சியையும் காட்டாமல், தில்லாக காலரை தூக்கி விட்டபடியே நடந்து வருகிறார் கருணாஸ். ஆனால், இந்த படத்தின் தோல்வியால் அவரது படக்கூலியை கணிசமான அளவு குறைத்திருப்பார் என்று கருதிய, சில பட்ஜெட் பட கம்பெனிகள் அவரை தொடர்பு கொண்டன. ஆனால் எடுத்த எடுப்பிலேயே அவர்களிடம் 75 லட்சம் சம்பளம் வேண்டும். இதில் நையா பைசா குறைந்தாலும் நடிக்க மாட்டேன் என்று சொடக் போட்டாராம் லொடுக்கு பாண்டி. இதனால் புக் பண்ண சென்ற படாதிபதிகள் விழுந்தடித்து ஓடி வந்து விட்டார்களாம். அதோடு, கருணாசுக்காக கதை ரெடி பண்ணி வைத்திருந்த சில இயக்குனர்களும் இப்போது சந்தானம், சத்யன் என்று வேறு ட்ராக்கில் செல்லத் தொடங்கி விட்டனர்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
07 மார், 2013 - 10:58 Report Abuse
Angry ஜெய் 75 லட்சம் ரொம்ப கம்மிங்க , இந்தி படத்துல ஆக்டு கொடுக்க வேண்டிய முகம் அது ..... இந்த மாதிரி மூக்கு ஆப்ரிக்காவுல கூட கிடையாது
Rate this:
LAX - Trichy,இந்தியா
05 மார், 2013 - 16:55 Report Abuse
LAX தற்போது சந்தமாமா என்ற படம் வெளியாகியுள்ளது. இந்த படம் பெரிதாக //ஒன்றும் ரசிகர்களை கவரவில்லை. இருப்பினும் முகத்தில் எந்த அதிர்ச்சியையும் காட்டாமல், தில்லாக காலரை தூக்கி விட்டபடியே நடந்து வருகிறார் கருணாஸ்.// வடிவேலுவை விமர்சித்த இவர் வடிவேலுவின் காமடி வசனம் போல "எவ்வளோ அடி வாங்கினாலும் வலிக்காத மாதிரியே நடிக்கிறாரோ....?"
Rate this:
sivagowri - paris,பிரான்ஸ்
05 மார், 2013 - 16:51 Report Abuse
sivagowri புது நடிகரா?
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
05 மார், 2013 - 16:09 Report Abuse
Vaal Payyan ஆச தோச ஆப்ளம் வட ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in