டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரசாந்துடன், "விரும்புகிறேன் என்ற படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகமானவர் சினேகா. அதன் பின், நல்ல குடும்ப நடிகை என்றஅங்கீகாரத்துடன், கமல், விஜய், விக்ரம், ஸ்ரீகாந்த் என்று, முன்னணி ஹீரோக்களுடன் ஒரு பெரிய ரவுண்டு வந்தார். இந்நிலையில், நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட சினேகா, தற்போது, அவர் நடித்து வெளிவந்துள்ள படத்தில், தன் நடிப்புக்கு கிடைத்து வரும் பாராட்டுக்களால் பூரித்து போயிருக்கிறார். அதனால், தொடர்ந்து, நல்ல கதையம்சமுள்ள படங்களை தேர்வு செய்து, தமிழ், தெலுங்கு என, நான்கு படங்களை கைவசம் வைத்துள்ளார். கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பதால், பாராட்டு கிடைப்பதோடு, அடுத்தடுத்து, நல்ல வாய்ப்புகளும் கிடைக்கின்றன. இதனால், என் இரண்டாவது இன்னிங்சில், தொடர்ந்து, தரமான கேரக்டர்களாக நடித்து, திரையுலகில் எனக்கென ஒரு தனி இடத்தை பிடிப்பேன் என்கிறார்.