Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நன்றி மறந்த சினிமாக்காரர்கள்- த்ரிஷா வேதனை

03 மார், 2013 - 14:34 IST
எழுத்தின் அளவு:

10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இடம் பிடித்திருக்கும் முக்கிய நடிகை த்ரிஷா. ரஜினி தவிர அனைத்து முன்னணி நடிகர்களுடனும் டூயட் பாடி விட்ட பெருமை இவருக்கு உண்டு. ஆனால் சமீகாலமாக, மேல்தட்டு ஹீரோக்களின் படங்கள் இவருக்கு கிடைக்கவில்லை. மாறாக, இரண்டாம் தட்டு நடிகர்களான, ஜெயம்ரவி, விஷால், ஜீவா போன்ற நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகளை பெற்று வருகிறார். ஆனால் அடுத்தபடியாக பார்த்தால், அந்த வாய்ப்புகளும் இல்லை. ரம் என்ற படத்தில் 4 நடிகைகளுள் ஒருவராக நடிக்கிறார் த்ரிஷா. ஆனால் அவர் எதிர்பார்த்து முயற்சி எடுத்த எந்த முன்னணி ஹீரோக்களின் படங்களும் அவருக்கு கிடைக்கவில்லையாம். அதனால் மனசொடிந்து போயிருக்கிறார் த்ரிஷா.

இதுகுறித்து அவர் கூறுகையில்,
இந்த சினிமாவில் என்னை வளர்த்து விட்டவர்களும் இருக்கிறார்கள். அதேபோல் என்னால் பெரிய ஆளாய் ஆனவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இப்போது அப்படி என்னால் வளர்ந்த சில இயக்குனர்களே என்னைப்பார்த்தால் கண்டும் காணாததும் போல் போய் விடுகிறார்கள். தொடர்ச்சியாக என்னுடன் டூயட் பாடிய ஹீரோக்களே வேறு நடிகைகளுடன் தோள் போட்டுக்கொண்டு ஜாலி நடை போடுகிறார்கள். ஆனால் எதிரில் நான் நிற்பதுகூட அவர்களின் கண்களுக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு நண்பர்களும் நன்றி மறந்தவர்களாக இருக்கிறார்கள். புதிது புதிதாக நடிகைகள் வந்து கொண்டேயிருப்பதால், என்போன்ற நடிகைகளை பழைய துணிகளைப்போன்று ஓரங்கட்டுகிறார்கள். இப்படி நன்றி மறந்த மனிதர்களைப்பார்க்கும்போது, இப்படிப்பட்ட சினிமாவிலா இத்தனை ஆண்டுகளாக இருந்தோம் என்று மனசு வேதனைப்படுகிறது என்கிறார் த்ரிஷா.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

susi - TAMILNADU,இந்தியா
17 அக், 2013 - 14:07 Report Abuse
susi ஆமா த்ரிஷா முதலில் கல்யாணம் ஆகி செட்டில் ஆகிற வழிய பாரு
Rate this:
LAX - Trichy,இந்தியா
05 மார், 2013 - 16:11 Report Abuse
LAX ஹாய் த்ரிஷா, ஒரு பேட்டியில் "நீங்கள் டூயட் பாடிய ஹீரோக்களில் எந்த ஹீரோவை அதிகம் பிடிக்கும்" என்று கேட்ட போது, விஜய்யைத்தான் சொல்வார் என்று பார்த்தால் அஜீத்தான் பிடிக்கும் என்றும், "எனது இந்த பதிலால் மற்ற ஹீரோக்கள் கோபப்பட்டாலும் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. என் மனதில் உள்ள உண்மையை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அது எனது சுபாவம்" என்று கூறியது கூட காரணமாக இருக்கலாம்.
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
04 மார், 2013 - 15:59 Report Abuse
Angry ஜெய் ரொம்ப வேதனைபட்டு மருந்த குடிச்சிடாதே
Rate this:
raja - us  ( Posted via: Dinamalar Android App )
04 மார், 2013 - 01:01 Report Abuse
raja நீ மட்டும் யோக்கியமா. வந்த புதுசுல பெரிய ஈரோக்களோட மட்டுமே நடிச்ச. அப்போ சின்ன ஈரோக்கள மதி்க்கள. பெரிய ஈரோக்கள் கழட்டி விட்ட அப்புறம் சின்ன ஈரோக்களோட சேர்ந்த. இப்போ நீ புளித்து விட்டாய். சீக்கிரம் தொழில் அதி்பர பாரு
Rate this:
sathya - abudabi  ( Posted via: Dinamalar Android App )
03 மார், 2013 - 23:51 Report Abuse
sathya ஏம்மா வயசு ஆச்சின்னா அப்படித்தான்
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in