Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குத்தாட்டத்துக்கு தயாராகும் சோனியா அகர்வால்!

02 மார், 2013 - 11:46 IST
எழுத்தின் அளவு:

டைரக்டர் செல்வராகவனின் மாஜி மனைவியான நடிகை சோனியா அகர்வால், ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். ஆனால் அதையடுத்து பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் கிட்டவில்லை. இந்தநிலையில்தான், பாலக்காட்டு மாதவன் என்ற படத்தில் நாயகியாக கமிட்டானார். மடிசார் கட்டும் மாமி வேடம் என்பதால், மாமிகளின் பாஷைகளை கற்றுக்கொண்டு தன்னை தயார் படுத்தினார் சோனியா. அதோடு, விரிந்து கிடந்த தனது இடுப்பு சதைப்பகுதியையும் சில மாதங்களாக ஜிம்முக்கு சென்று கடும் உடற்பயிற்சி செய்து கரைத்தார் நடிகை. இப்போது ஓரளவு உடல் சதை கரைந்து ட்ரிம்மாகி விட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு அவரை பார்த்தவர்களே இப்போது பார்த்து அசந்து போகிறார்கள். அந்த அளவுக்கு க்யூட்டாகி விட்டார் சோனியா. ஆனால் முன்பு கேரக்டர் ரோல்களுக்கு அவரை கமிட் பண்ணியவர்கள் இப்போதோ, அவர்தான் மீண்டும கதாநாயகியாக நடிக்கப்போகிறாரே இனிமேல் எப்படி சின்ன வேடங்களில் நடிப்பார் என்று சோனியாவை கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டனர். இந்த நிலையில், பாலக்காட்டு மாதவன் படப்பிடிப்பும் நடைபெறாமல் இருப்பதால், கேமரா முன்பே செல்ல வழியில்லாமல் மீண்டும் வீட்டு முகப்பு வளையத்தையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருக்கிறார் நடிகை.

இந்த சூழ்நிலையில், அவரைப்பார்க்கும் சினிமா நண்பர்கள், மார்க்கெட் இல்லாத நடிகருடன், நடிக்க வேண்டும் என்பதற்காக மாதக்கணக்கில் பயிற்சி எடுத்து இப்போது எந்த புண்ணியமும் இல்லாமல் போய் விட்டதே என்று சோனியாவை டென்சன் பண்ணும் விதத்தில் பேசுகிறார்களாம். ஆனால் அவரோ, இந்த படம் இல்லையென்றாலும் எனது அடுத்த ரவுண்டு ஆர்ப்பாட்டமாக இருக்கும்.  அதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கப்போகிறேன் என்று திடீரென்று தில்லாக பேசுகிறாராம். அப்படி என்னதான் அடுத்த கட்ட முயற்சி எடுக்கப்போகிறீர்கள்? என்று கேட்டவர்களிடம், கதாநாயகி வேடத்துக்காக ஒன்றும் நான் தவம் கிடக்கவில்லை. அதிரடி குத்தாட்ட நடிகையாகவே இந்த உடல் மாற்றம். அதற்கான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருக்கிறேன். அதனால் கூடிய சீக்கிரமே தென்னிந்தியா தொடங்கி இந்தி சினிமா வரை எனது குத்தாட்ட எல்லையை விரிவுபடுத்துவேன் என்று சொல்லி தொடை தட்டுகிறாராம் சோனியா அகர்வால்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

lion raj - vienna,ஆஸ்திரியா
04 மார், 2013 - 01:16 Report Abuse
lion raj இதெல்லாம் ஒரு பொழப்பா ???? பார்த்தா படிச்ச பொண்ணு மாதிரி இருக்க ... வேற நல்ல வேலை செய்து ஒரு நல்ல வாழ்கையை அமைக்கலாமே ...? வேற வேலையே தெரியாதா ???
Rate this:
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
03 மார், 2013 - 00:00 Report Abuse
Sivakumar Manikandan அப்படியே நாப்கின் விளம்பரம், கிரைண்டர் விளம்பரம், மிக்சி விளம்பரம், ......அப்படியே போன கொஞ்ச டைம் ரெம்ப காசு ..............ஆனா பாப்பா முன்ன விட இப்ப கொஞ்சம் மெருகு கூடி இருக்கு .........
Rate this:
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
02 மார், 2013 - 19:29 Report Abuse
Sivakumar Manikandan செலவுக்கு காசு இல்லாதப்ப இப்படி போறது தப்பு இல்லை....தப்பான வழியெல போகம இருந்த சரி .................
Rate this:
vijay - karaikudi  ( Posted via: Dinamalar Android App )
02 மார், 2013 - 15:53 Report Abuse
vijay good policy ithaye maintain pannunga. next namitha neenga thaann. vazhga tamil cinema.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in