Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போதையுடன் குத்தாட்டம் போடும் நீதுசந்திரா!

02 மார், 2013 - 10:28 IST
எழுத்தின் அளவு:

தீராத விளையாட்டுப்பிள்ளை நீது சந்திரா, யுத்தம் செய் படத்தில் கன்னித்தீவு பொண்ணா என்ற பாடலுக்கு ஆடி பிரபலமானவர். அதையடுத்து ஜெயம்ரவியுடன் ஆதிபகவன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தில் பல காட்சிகளை தம் அடித்தபடி நடித்தவர், ஜெயம்ரவியுடன் அதிரடி சண்டை காட்சியிலும் நடித்து பரபரப்பு கூட்டியிருக்கிறார். அதையடுத்து, இவர் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் அளவுக்கு தகுதியான நடிகை என்றும் சினிமாத்துறையினர் கூறி வருகின்றனர். ஆனால் அதற்கேற்ற வளர்ச்சி என்பது நீதுவுக்கு இல்லை. ஆதிபகவன் படத்தின் தோல்வியால், இவர் நடித்த எந்த படமும் இதுவரை வெற்றி பெற்றதில்லை என்று ஓரங்கட்டுகிறார்கள் படாதிபதிகள்.

இந்த நிலையிலும், ஆர்யா-ஹன்சிகா-அஞ்சலி நடித்து வரும் சேட்டை படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடுகிறார் நீதுசந்திரா. பார் செட்டப்பில் படமாக்கப்படவிருக்கும் இப்பாடலில் தண்ணி அடித்தபடி மப்புடன் ஆடுகிறாராம் நீது. ஏற்கனவே ஸ்டைலாக தம் அடித்து புகை மண்டலத்தை கிளப்பி விட்ட அவர், இப்படத்தில் புதுமையான முறையில் பாட்டிலை திறந்து சரக்கு அடிக்கிறாராம். அதற்காகவே சில நாட்களாக அம்மணிக்கு பயிற்சி கொடுக்க உள்ளார்களாம். அதோடு, சும்மாவே அவர் சுத்தி சுத்தி ஆடுவார். அதுவும் நம்மளோட மப்பு அடித்து விட்டு வேறு ஆடுகிறார். அதனால் நாமெல்லாம் அலாட்டாக இருக்க வேண்டும் என்று நீதுசந்திராவுடன் இணைந்து ஆட்டம் போடும் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி ஆகியோர் இப்போதே நடன ரிகர்சலை தொடங்கி விட்டார்களாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

divya - pudukottai  ( Posted via: Dinamalar Android App )
02 மார், 2013 - 15:48 Report Abuse
divya unga bodhaikku urugai aaga povathu ennamo namma tamil rasigarkal thaan. paavam avunga...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in