'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
தற்போது வெளியாகியுள்ள, ஆதி பகவன் படத்தில், நீத்து சந்திரா தான், ஹீரோயின். இந்த படத்தில் நடிப்பதற்கு, அவருக்கு வாய்ப்பு கிடைத்ததே, மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்ததாம். இயக்குனர் அமீரின்,"பருத்தி வீரன் குறித்து கேள்விப்பட்ட நீத்து சந்திரா, அவரிடம் சென்று வாய்ப்பு கேட்டுள்ளார். ஆனால், நீத்துவுக்கு தமிழ் தெரியாததால், வாய்ப்பு அளிக்க, அமீர் மறுத்து விட்டாராம். இதை சவாலாக எடுத்துக் கொண்ட, நீத்து சந்திரா, முழு மூச்சாக, தமிழ் பயில ஆரம்பித்துள்ளார். பத்து மாதங்களுக்கு பின், ஓரளவு பேசக் கற்றுக்கொண்ட நீத்து, இயக்குனர் அமீரை, மீண்டும் தொடர்பு கொண்டு, "இப்போது எனக்கு, தமிழில் பேசத் தெரியும். நடிக்க வாய்ப்பு தருகிறீர்களா என, தமிழிலேயே கேட்க, அமீர் ஆச்சர்யப்பட்டு, நீத்துவின், மனஉறுதியை பாராட்டி, அவருக்கு ஆதி பகவனில் வாய்ப்பு தந்தாராம். படப் பிடிப்பின்போது, சில நேரங்களில், இரண்டு நாட்களுக்கு மேல், தொடர்ச்சியாக பங்கேற்க வேண்டியிருந்தாலும், களைப்பு பார்க்காமல், நடித்து கொடுத்தாராம், நீத்து சந்திரா.