Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உணர்ச்சிக் குவியலாய் வந்துள்ள 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர்

29 மார், 2023 - 22:26 IST
எழுத்தின் அளவு:
Ponniyin-Selvan-2-Trailer-out

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகியுள்ளது..

முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தின் டிரைலர் எதிர்பார்த்ததை விடவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இரண்டாம் பாகத்தில்தான் கதை மிகவும் பரபரப்பாக இருக்கும். ஒரு பக்கம் அருண்மொழி வர்மன் இறந்ததாக வந்த செய்தியுடனும், மந்தாகினி யார் என்ற சஸ்பென்ஸுடனும் முதல் பாகம் முடிவடைந்தது.

இரண்டாம் பாகத்தில் சோழ தேசத்தில் நடக்கும் அரசியல் ஆட்டம், நந்தினியின் பழி வாங்கும் படலம், தங்களது நாட்டைக் காப்பாற்ற ஆதித்த கரிகாலன், அருண் மொழி வர்மன், குந்தவை ஆகியோர் போராடுவது என இரண்டாம் பாகம் நகரும்.

3 நிமிடங்கள் 34 வினாடிகள் ஓடும் இரண்டாம் பாக டிரைலர் முதல் பாக முடிவிலிருந்து ஆரம்பமாகிறது. பெரிய பழுவேட்டரையரின் அரசியல் சதி, பாண்டிய ஆபத்துதவிகளின் சபதம், போர்க்களக் காட்சிகள், சண்டைக் காட்சிகள், அருண்மொழி வர்மன் மீண்டும் வருவது, மந்தாகினி பற்றிய ரகசியத்தை சோழரிடம் குந்தவை கேட்பது, நந்தினியின் பழி வாங்கும் கோபம், மதுராந்தகனின் பதவி ஆசை உள்ளிட்ட பலவும் இடம் பெற்றுள்ளது.

ஒவ்வொருவருக்குமே முக்கியத்துவமான காட்சிகள் இரண்டாம் பாகத்தில் இருக்கிறது என டிரைலரைப் பார்த்ததும் புரிகிறது. நடிப்பில் ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள்.

ஏஆர் ரஹ்மானின் இசை, ரவிவர்மனின் ஒளிப்பதிவு முதல் பாகத்தை விடவும் மிரட்டலாய் இருக்கப் போகிறது என்பது தெரிகிறது.

டிரைலரின் கடைசியில் நந்தினியும், ஆதித்த கரிகாலனும் நேருக்கு நேர் சந்திக்கும் அந்தக் காட்சி டிரைலரின் ஹைலைட் மட்டுமல்ல, படத்தின் ஹைலைட், நாவலின் ஹைலைட்….

இன்னும் ஒரு மாதம் எப்படி காத்திருக்கப் போகிறோம் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
‛பொன்னியின் செல்வன் 2' இசை வெளியீடு கோலாகலம் : சிவப்பு கம்பள வரவேற்பில் நனைந்த திரைப்பிரபலங்கள்‛பொன்னியின் செல்வன் 2' இசை வெளியீடு ... தமிழ் சினிமாவின் பொற்காலம் - கமல் பேச்சு தமிழ் சினிமாவின் பொற்காலம் - கமல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

ஸ்ரீதேவி - தூத்துக்குடி,இந்தியா
30 மார், 2023 - 13:28 Report Abuse
ஸ்ரீதேவி டிரெய்லர் மிக அருமை. மணிமேகலை பாத்திரம் விடுபட்டுள்ளது தெரிகிறது. அருண்மொழியும் வந்தியத்தேவனும் இணைந்து மேற்கொள்ளும் சண்டை எப்போது வருவதாக இணைக்கப் பட்டுள்ளதோ? இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக இருக்க போவது உறுதி வாழ்த்துக்கள் மணி சார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in