இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கமலின், "விஸ்வரூபம் படத்தில் நாயகியாக நடித்தவர் பூஜா குமார். இவர், 1997ல் கேயார் இயக்கிய, "காதல் ரோஜாவே என்ற படத்தில் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து, தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என, பலமொழிகளிலும் பரவலாக நடித்து வந்த பூஜா குமார், பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு, "விஸ்வரூபம் மூலம் மீண்டும் தமிழில் மெகா என்ட்ரி கொடுத்திருக்கிறார். இப்படம் தமிழைப் போலவே இந்தியிலும் வெற்றி பெற்றதையடுத்து, பாலிவுட் பட வாய்ப்புகள் பூஜாவுக்கு கிடைத்துள்ளதாம். அதனால் மீண்டும் இந்திய படங்களில் பிசியாகிறார் அவர். இந்நிலையிலும் ஆங்கில படங்களில் நடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தும் பூஜா, இப்போதும் குறும்படங்கள் தயாரிப்பது, குச்சுப்புடி, கதக், பரதம் போன்ற நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என, தொடர்ந்து வருகிறார். இந்த பூஜா குமாருக்கு இப்போது வயது, 36 என்பது குறிப்பிடத்தக்கது.