ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
"ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு முன் வரை கிடைத்த படங்களில் நடித்து வந்த ஹன்சிகா, இப்போது பிடித்த படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் உள்ளார். குறிப்பாக, அலசி ஆராய்ந்தே கதைகளை ஓ.கே., செய்பவர், அப்படங்களில் தன்னுடன் நடிக்கும் சக நடிகர், நடிகைகளும் ஒத்துழைப்பு தருபவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டே, படங்களில் நடிப்பது பற்றி முடிவு செய்கிறார். முக்கியமாக, டான்ஸ் மாஸ்டர் விஷயத்தில் கூடுதலான கவனம் செலுத்துகிறார் ஹன்சிகா. தன் பாடி லாங்குவேஜ்க்கு பொருத்தமான, நடன அசைவுகளை வெளிப்படுத்தக்கூடிய சில டான்ஸ் மாஸ்டர்களுக்கு, தன் சார்பில் சிபாரிசும் செய்கிறார். அப்படி ஹன்சிகாவின் அபிமானத்திற்குரிய டான்ஸ் மாஸ்டர் என்ற பட்டியலில், முதல் இடத்தில் இருப்பவர் பிருந்தா. ஹன்சிகா நடித்த அதிகபட்ச படங்களின் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ள இவர் தான், அவரது சமீபத்திய பேவரிட் நடன மாஸ்டராம்.