ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
"நீர்ப்பறவை, கடல் படங்களைத் தொடர்ந்து, தனுஷ் நடித்துள்ள "மரியான் படம் கடலும், கடல் சார்ந்த மக்களைப் பற்றிய கதையில் உருவாகியுள்ளது. இப்படத்தில், மீனவராக நடித்துள்ளார் தனுஷ். இந்த படத்தில் தனுஷின் காதலியாக நடிக்கிறார், "பூ பார்வதி. பக்கா மீனவ பெண் போன்றே காஸ்டியூம் மட்டுமின்றி, பேச்சுவழக்கு, நடை உடை பாவனை என, அனைத்தையும் மாற்றி, கதாபாத்திரமாகவே மாறியுள்ளாராம். தனுஷின் காதலுக்காக ஏங்கும் காட்சிகள், கடலுக்குள் சென்ற அவர், குறித்த நாளில் கரைக்கு திரும்பாததால், கரையில் நின்றபடி தவிக்கும் காட்சிகளில் உயிரோட்டமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக சொல்லும் பார்வதி, "இதுவரை தமிழில், "பூ பார்வதியாக அழைக்கப்பட்ட நான், இனி, "மரியான் பார்வதி என்று அழைக்கப்படுவேன் என்கிறார்.