டிஜிட்டலில் 16-வயதினிலே...!
பழைய சினிமாக்களை டிஜிட்டல் மையமாக்கும் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. கர்ணன், வசந்தமாளிகை போன்ற படங்களின் வரிசையில் இப்போது ரஜினி-கமலின் 16 வயதினிலே படமும் டிஜிட்டலில் வெளியாக இருக்கிறது. இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான படம் 16 வயதினிலே. ரஜினி, கமல், ஸ்ரீதேவி, கவுண்டமி, காந்திமதி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இப்படம், 1977 ல் வெளியாகி தமிழ் சினிமாவில் ஒரு புதிய சகாப்தத்தை படைத்தது.
பரட்டையாக ரஜினியும், சப்பானியாக கமலும், மயிலாக ஸ்ரீதேவியும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இளையாராவின் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின. இந்நிலையில் இப்படத்தை 36 ஆண்டுகளுக்கு டி.டி.எஸ். மிக்ஸிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டு டிஜிட்டலில் வெளியிட இருக்கின்றனர். தற்போது இதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. சம்மர் ஸ்பெஷலாக இப்படத்தை வெளியிட உள்ளனர்.