எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் | பாடகர் ஹரிஹரனுக்கு லதா மங்கேஷ்கர் விருது! | இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் ஆர்.வி.உதயகுமார்! | முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்குமார்-சைந்தவி! | பக்திமார்க்கத்தில் இறங்கினார் சிம்பு...! | மீண்டும் ஹீரோவாகிறார் கரு.பழனியப்பன்! | சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான் | விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்? |
மிரட்டலுக்குப் பிறகு வினய் நடித்து வரும் காமெடிப்படம் ஒன்பதுலகுரு. இதில், லட்சுமிராய், சத்யன், பிரேம்ஜி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் காதல் ஜோடிகளாக நடித்துள்ள வினய்-லட்சுமிராய் ஆகிய இருவரும் அதிக நெருக்கமாக, உணர்ச்சிப்பூர்வமாக பின்னி பிணைந்து நடித்து வருவதாக செய்திகள் பரவியுள்ளது. மேலும், படப்பிடிப்பு முடிந்த பிறகு இருவரும் தனிமையில் அமர்ந்து மணிக்கணக்கில் மனம் விட்டு பேசுவதாகக்கூட கூறுபவர்கள், அவர்களுக்கிடையே காதல் தீ பத்திக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.
ஆனால் இந்த செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்பதை அறிய வினய்யுடம் கேட்டபோது, இந்த படத்தில் நானும், லட்சுமிராயும் காதல் காட்சிகளில் அதிக நெருக்கமாக நடிப்பது உண்மைதான். ஆனால் அது படத்துக்காகத்தான். மற்றபடி எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை. மேலும், எனக்கெல்லாம் நடிகைகள் மீது ஒருநாளும் காதல் வராது. காரணம், நான் தொழிலை நேசிப்பவன். உடன் நடிக்கும் சக நடிகைகளையும் அந்த கதாபாத்திரங்களாக மட்டுமே பார்ப்பவன். அப்படித்தான் லட்சுமிராயையும் பார்க்கிறேன். மற்றபடி எங்களைப்பற்றி பரவியிருக்கும் காதல் செய்தி வெறும் வதந்தி மட்டுமே என்கிறார் வினய்.