Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

100-வது நாளை கொண்டாடிய விஜய்யின் துப்பாக்கி...!

20 பிப்,2013 - 15:34 IST
எழுத்தின் அளவு:

  சமீபத்திய தமிழ் சினிமாக்களில் ஒரு படம் 25நாட்கள் ஓடுவதே குதிரை கொம்பாக இருக்கிற வேளையில் விஜய்யின் துப்பாக்கி படம் 100வது நாளை கொண்டாடி உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், காஜல் அகர்வால் நடிப்பில் தீபாவளி விருந்தாக நவம்பர் 13ம் தேதி ரிலீஸ் ஆன படம் துப்பாக்கி. ஸ்லீப்பர் செல் எனும் பயங்கரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட் இப்படம் இதுவரை யாரும் பார்த்திராத ஒரு விஜய்யாக, முற்றிலும் ஸ்டைலான விஜய்‌யாக துப்பாக்கி படம் காட்டியது.

ஆரம்பத்தில் தலைப்பு பிரச்னை பின்னர் படம் ரிலீஸ் ஆன பின்னர் இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு என்று சில பிரச்னைகளை சந்தித்த துப்பாக்கி படம் எதிர்ப்புகளையும் கடந்து சூப்பர்-டூப்பர் ஹிட்டானது. சுமார் ரூ.70 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் முதல் இரண்டு வாரத்திலேயே ரூ.100கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது. மேலும் இதுநாள் வரை ரூ.200கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் ஆகியோரின் சினிமா கேரியரிலேயே துப்பாக்கி படம் தான் அதிக வசூலை கொடுத்த படம்.

துப்பாக்கி படம் இன்று(பிப்-21)  100வது நாளை கொண்டாடி உள்ளது. வசூல் ரீதியாக மட்டும் இல்லாமல், துப்பாக்கி படம் 100வது நாளையும் எட்டியுள்ளதால் இந்த 100வது நாளை ஒரு பெரிய விழாவாக எடுத்து கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. இதில் துப்பாக்கி படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களையும் அழைத்து நினைவு பரிசு வழங்க இருக்கிறார் தாணு. கடைசியாக விஜய் நடித்த காவலன், நண்பன், துப்பாக்கி போன்ற படங்கள் ஹிட் அடித்துள்ளதால் விஜய்யின் ரசிகர்கள் ரொம்பவே உற்சாகத்தில் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அவரது அடுத்த படத்தையும் ரொம்ப ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே தமிழில் ஹிட் அடித்த துப்பாக்கி படத்தை இப்போது இந்தியில் அக்ஷ்ய் குமாரை வைத்து ரீமேக் செய்து வருகிறார் டைரக்டர் முருகதாஸ்.

Advertisement
கொரியா திரைப்பட விழாவுக்கு போகும் நீர்ப்பறவை...!கொரியா திரைப்பட விழாவுக்கு போகும் ... மீண்டும் அண்ணன் இயக்கத்தில் தம்பி...! மீண்டும் அண்ணன் இயக்கத்தில் தம்பி...!

வாசகர் கருத்து

dinesh kumar - tirupur,இந்தியா
12 மார்,2013 - 17:58
dinesh kumar இ லவ் விஜய் சார்
GANESAN MRP - NAMAKKAL,இந்தியா
12 மார்,2013 - 07:47
GANESAN MRP வாழ்த்துக்கள்
ABR - Madurai,இந்தியா
25 பிப்,2013 - 11:35
ABR 2012 விஜயின் சிறப்பான வருடம் 2012ல் வெளியான எத்தனையோ மொக்கை படங்கள் மத்தியில் (BILLA 2 , மாற்றான், 3) சிறந்த பொழுதுபோக்கு படம் துப்பாக்கி மற்றும் நண்பன் 2013லும் தொடர வாழ்த்துக்கள் I'm waiting for Thuppakki 2
pavithra - coimbatore,இந்தியா
23 பிப்,2013 - 15:50
pavithra உங்களுடைய எல்லா படங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்: எங்கள் இளைய தளபதி . உங்களுடைய அடுத்த படத்திற்காக காத்திருக்கும் தீவிர ரசிகை .............,,
Sasikumar Thedavur - Thedavur,Gangavalli,இந்தியா
23 பிப்,2013 - 12:09
Sasikumar Thedavur நல்ல படங்களை எடுபதிலும் நல்ல படங்களை வரவேற்பதிலும் தமிழன் எப்போதும் முதலிடம்............. தலைவா யு ஆர் கிரேட்............. "ஆல் இச் வெல்"
priya - coimbatore,இந்தியா
22 பிப்,2013 - 14:40
priya இது போல விஜய் இன் எல்லா படங்களும் வெற்றி பெற வாழ்த்துகள்.
vijay - chinnai,இந்தியா
22 பிப்,2013 - 13:25
vijay நோ வாட்டர், நோ electricity, no food, no money, why this hero worship , do some work plz.
vijay - chennai,இந்தியா
22 பிப்,2013 - 12:01
vijay நோ வொர்க், நோ எலெக்ட்ரிசிட்டி, நோ வாட்டர், நோ மோனே, வி திஸ் ஹீரோ verrie
Silambarasan.G - coimbatore,இந்தியா
21 பிப்,2013 - 17:58
Silambarasan.G விஜய் எப்போவுமே மாஸ் டா விஜய் யா மிஞ்ச எவன் டா ...............
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
21 பிப்,2013 - 16:43
சு கனகராஜ் எப்படியோ ஓட்டி விட்டார்கள்
surendhar - vellore,இந்தியா
21 பிப்,2013 - 13:00
surendhar லத்திகா பட 200 நாள் போஸ்டர் தான் நியாபகத்துக்கு வருது. பவர் ஸ்டாருக்கு சரியான போட்டி
saravanakumar - aruppukottai,இந்தியா
21 பிப்,2013 - 12:28
saravanakumar vijay means victory
sivapraveen - Mumbai,இந்தியா
21 பிப்,2013 - 09:47
sivapraveen தலைவா நீயே தமிழ் சினிமாவின் முடி சூடா மன்னன் ...... தலைவா எங்கள் தங்க தளபதி " யு ஆர் கிரேட் ". என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இளையதளபதிக்கும், முருகதாஸ்கும் .......
விருமாண்டி - மதுரை,இந்தியா
21 பிப்,2013 - 01:48
விருமாண்டி என்ன்ன்ன்ன்ன்ன கொடும சார் இது ..?
R.Prabu - Eechangudi,இந்தியா
21 பிப்,2013 - 00:43
R.Prabu எங்கள் தளபதி எப்போதுமே சூப்பர்தான்.......நல்லவனுக்கு எப்போதும் வெற்றி நிச்சயம்...........அடுத்த சூப்பர் ஸ்டார் கண்டிப்பா நம்ம விஜய் மட்டுதான் என்று தெளிவாக தெரியுது............உழைத்திடு உயர்ந்திடு.........
Periya-Rasu - Baton Rouge,யூ.எஸ்.ஏ
20 பிப்,2013 - 18:09
Periya-Rasu நீங்களா சொல்லிக வேண்டியது தான் 100 நாள் ஒட்டுசு 1000 நாள் ஒடுசுனு .. ஏன்டா இப்படி பொரளி பித்தலாட்டம் பேசிக்கிடு..அவன் அவன் மழை தண்ணி இல்லாம அடுத்த வேலை சோறு இல்லாம கஷ்டப்பட்டுக்கு இருக்கான் இவனுக வேற சுய தர்மரம் அடிசிக்கிடு
samooga arvalan - tamilnadu,இந்தியா
20 பிப்,2013 - 17:33
samooga arvalan அண்ணன் முருகதாஸ் கஷ்டப்பட்டு பண்ணுன கனவு ப்ராஜெக்ட் 7ஆம் அறிவு ஓடல. டைம் பாஸ் கு பண்ணுன துப்பாக்கி ஹிட் ஆகிடுச்சு. விஜய் கிட்ட ஏதோ இருக்குபா
bala - chennai,இந்தியா
20 பிப்,2013 - 16:33
bala வாழ்த்துக்கள் தளபதி...
sakthi - lonon,யுனைடெட் கிங்டம்
20 பிப்,2013 - 16:12
sakthi சூப்பர் அப்பு விஜய்கு என்றும் வெற்றி
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film ABCD2 (Hindi)
  • ஏபிசிடி2 (ஹிந்தி)
  • நடிகர் : வருண் ‌தவான்
  • நடிகை : ஸ்ரத்தா கபூர்
  • இயக்குனர் :ரெமோ டி சோஷா
  Tamil New Film Hamari Adhuri Kahani (Hindi)
  Tamil New Film Dil Dhadakne Do (Hindi)
  Tamil New Film Enakku veeru engum kilaigal kidaiyathu

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in