இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி "வாய்மை" என்ற படத்தில் மீண்டும் நடிக்கிறார். அ.செந்தில்குமார் என்ற புதுமுகம் இயக்குகிறார். சாந்தனு, பூர்ணிமா, மனோஜ் பாரதி, பிருத்வி பாண்டியராஜன் என சினிமா வாரிசுகள் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் கவுண்டமணி உலக புகழ் பெற்ற இதய சிகிச்சை நிபுணராக நடிக்கிறார். அவர் பெயர் பென்னி. முல்லை பெரியார் அணையை கட்டிய பென்னி குயிக் மேல் இருக்கும் அன்பால் தன் பெயரை அப்படி வைத்துக் கொள்வார். தன்னிடம் வரும் நோயாளிகளிடம் அவர் கொடுக்கும் லந்துகள்தான் காமெடி. கிட்டத்தட்ட கவுண்டமணிதான் ஹீரோ மாதிரி என்கிறார்கள்.
"ஐ யம் கம்பேக் வித் ஏ ஸ்மால் பிளாஷ்பேக்" இதுதான் கவுண்டமணியன் ஓப்பனிங் டயலாக். "அது ஏண்டா தமிழ் இல்லாம இங்கிலீஸ் பேசுறீங்க. இங்கிலீஸ் இல்லாம தமிழ் பேசமுடியாதா", "அடபாட்டலுக்கு பொறந்தவைங்களா டாஸ்மாக்குல சரக்கு அடிக்கிறீங்க. அப்புறம் கிட்னி ரிப்பேரு, லிவர் பன்ஞர்னு டாக்டர்கிட்ட ஏண்டா வர்றீங்க. அப்படியே கூட ரெண்டு பாட்டிலை முழுங்கிட்டு அங்கேயே சாக வேண்டியதுதானே. நல்லவங்களுக்கு வைத்தியம் பார்க்கவே எங்களுக்கு நேரமில்ல" இப்படி ஏகப்பட்ட பன்ஞ் அடிக்கிறார் கவுண்டர்.