Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியின் புதிய பட விவகாரம்! கே.வியை கத்தரித்தது ஏ.ஜி.எஸ்!!

20 பிப், 2013 - 11:41 IST
எழுத்தின் அளவு:

கோச்சடையான் படத்துக்குப்பிறகு ரஜினி எந்த படத்தில் யாருடைய இயக்கத்தில் நடிக்கிறார் என்பது பற்றி இன்னும் எந்த திட்டவட்டமான செய்திகளும் வெளியாகவில்லை. ஆனால் ரஜினியின் அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கக்கூடும் என்ற செய்திகள் மாற்றான் படத்துக்கு முன்பிருந்தே சினிமா வட்டாரங்களில் லீக்காகிக்கொண்டிருந்தது. ஆனால் மாற்றான் திரைக்கு வந்து விட்ட நிலையில், அவர் ரஜினி படத்தை இயக்குவது எப்போது? என்ற கேள்விகள் எழுந்து வந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் இப்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.

அதாவது. மாற்றான் படத்துக்கு முன்பு, ரஜினியிடம் ஒரு கதைக்கருவை சொல்லி ஓ.கே செய்திருந்த கே.வி.ஆனந்துக்கு அப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் அட்வான்ஸ்கூட செய்திருந்தார்களாம். ஆனால் மாற்றான் கொடுத்த அடியின் எதிரொலியாக இப்போது, ஒருவேளை நாங்கள் ரஜினி நடிக்கும் படத்தை தயாரிப்பதாக இருந்தால், அந்த படத்துக்கு நீங்கள் ஒளிப்பதிவு மட்டும் செய்யுங்கள். டைரக்ஷ்ன் பொறுப்பை, ஷங்கர் அல்லது முருகதாசிடம் விட்டுவிடுகிறோம் என்று கூறுகிறார்களாம். இதனால் ரஜினியிடம் கதை சொல்லி ஓ.கே வாங்குவது நான், படம் பண்ணுவது வேறு ஆளா? என்று விக்கவும் முடியாமல் கக்கவும் முடியாமல் தடுமாறிப்போயிருக்கிறார் கே.வி.,

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
09 நவ, 2013 - 23:22 Report Abuse
Vasudevan Srinivasan தோல்வி என்பது சினிமாவில் சகஜம்தான். சிகரங்களும், இமயங்களும் கூட தோல்வியை சந்தித்திருக்கிறார்கள். மாற்றான் தோற்றான் என்பதனால் அயனின் மற்றும் கோ பட வெற்றியை மறக்கலாமா.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
22 பிப், 2013 - 11:38 Report Abuse
சு கனகராஜ் ஓடுற குதிரை மீதுதான் பணத்தை கட்டுவார்கள் சினிமா காரர்கள்
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
20 பிப், 2013 - 14:44 Report Abuse
Vaal Payyan விக்கவும் முடியாமல் கக்கவும் முடியாமல் ... சூப்பர் வரி ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in