Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கில் மீண்டும் ஆரம்பமான டப்பிங் பட சர்ச்சை : ‛வாரிசு' தான் குறியா...!

07 டிச, 2022 - 10:25 IST
எழுத்தின் அளவு:
Is-Varisu-again-target-in-telugu-film-industry

'வாரிசு' படத்தைத் தெலுங்கில் 'வாரிசுடு' என்ற பெயரில் டப்பிங் செய்து நேரடிப் படங்களுக்கு இணையாக வெளியிடுவது குறித்த சர்ச்சை கடந்த சில வாரங்களாகவே இருந்து வருகிறது. தெலுங்கு, தமிழ்த் திரைப்பட சங்கங்கள் இது குறித்து பேசி தீர்த்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், விசாகப்பட்டிணம் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் மீண்டும் இந்த சர்ச்சையைக் கையில் எடுத்துள்ளது.

நேற்று அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பண்டிகை நாட்களில் நேரடி தெலுங்குப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என சங்கம் விவாதித்துள்ளது. இம்மாதிரியான பண்டிகை நாட்களில் தெலுங்குப் படங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தியேட்டர்காரர்களைக் கேட்டுக் கொள்கிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

'வாரிசு' படத்தைத் தயாரித்துள்ள தில் ராஜு, தெலுங்குத் திரையுலகத்தில் மிகப் பெரிய வினியோகஸ்தர், தியேட்டர் வட்டாரங்களில் அதிக நெருக்கம் உடையவர். பல மாதங்களுக்கு முன்பே அவர் 'வாரிசு' படத்தைத் தெலுங்கில் வெளியிடுவதற்காக ஒப்பந்தம் செய்துவிட்டாராம். அதனால், நேரடித் தெலுங்குப் படங்களுக்கு முக்கிய தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது என்கிறார்கள்.

பிரச்சினை முடிந்ததாக சொல்லப்பட்ட நிலையில் மீண்டும் இந்த விவகாரம் ஆரம்பமாகியுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இதில் பல திருப்பங்கள் ஏற்படலாம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
50வயது கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்50வயது கதாபாத்திரத்தில் நடிக்கும் ... டிஎஸ்பி - கமெண்ட்ஸ் 'ஆப்' செய்து டுவீட் போடும் விஜய் சேதுபதி டிஎஸ்பி - கமெண்ட்ஸ் 'ஆப்' செய்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

samvijayv - Chennai,இந்தியா
09 டிச, 2022 - 09:59 Report Abuse
samvijayv இந்த படம் மிக பெரிய தோல்வி அடைய அதிக வாய்ப்பு உள்ளது, ஏன் என்றால் இதற்கு முன் இதே போல் சர்ச்சைக்கு உட்பட்ட விஜயின் அனைத்து படங்களும் இதற்கு ஓர் உதாரணம்.
Rate this:
lana -  ( Posted via: Dinamalar Android App )
08 டிச, 2022 - 08:16 Report Abuse
lana எதையாவது கிளப்பி விட்டு கிட்டே இருக்கனும். அப்ப தான் படம் ஓடும். இல்லை எனில் theater ஐ விட்டு தான் ஓடும்
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
08 டிச, 2022 - 04:40 Report Abuse
Mani . V சீக்கிரம் இந்த பிரச்சினையை முடிங்கப்பா. சோறு, தண்ணி இறங்க மாட்டேன்கிறது. தூக்கம் வரமாட்டேன்கிறது.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08 டிச, 2022 - 04:39 Report Abuse
J.V. Iyer சோதனை மேல் சோதனை.. போதுமடா சாமி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in