‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கமலின் விஸ்வரூபம், படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல் வசூலிலும் விஸ்வரூபம் படைத்து வருகிறது. இதுவரை ரூ.120 கோடியை வசூல் ஈட்டியுள்ளது. கமல்ஹாசனின் பிரம்மாண்ட தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய 3 மொழிகளில் வெளியாகி இருக்கும் படம் விஸ்வரூபம். கமலே இயக்கி, நடித்துள்ள இப்படம் வெளிவருதற்கு முன்பே பல டி.டி.எச். ரிலீஸ், முஸ்லிம் அமைப்புகளின் பிரச்னை போன்ற சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக முஸ்லிம் அமைப்பினரின் எதிர்ப்பால் தமிழகத்தில் இப்படம் இரண்டு வாரத்திற்கு தடை செய்யப்பட்டது. பிறகு அந்த அமைப்பினருடன் கமல் பேசி, ஒரு சமரச உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்தவாரம் 7ம் தேதி விஸ்வரூபம் படம் தமிழகத்தில் ரிலீஸ் ஆனது.
சுமார் ரூ.96 கோடி செலவில் உருவான இப்படம் தமிழகத்தில் ரிலீஸான 4 நாட்களிலேயே பெரும் இமாலய வசூல் சாதனையை புரிந்துள்ளது. உலகம் முழுக்க இப்படம் இதுநாள்வரை ரூ.120 கோடியை வசூலித்துள்ளது.
இதுகுறித்து விஸ்வரூபம் படத்தில் முமராக நடித்த ராகுல் போஸ் தனது ட்விட்டர் வலைதளத்தில் மகிழ்ச்சி பொங்க கூறியிருப்பதாவது, இப்போது தான் விஸ்வரூபம் படம் ரூ.120 கோடியை வசூல் செய்தததாக தகவல் வந்தது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நடித்த படமும் 100கோடி வசூல் செய்த படங்களின் பட்டியலில் சேர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக விஸ்வரூபம் படக்குழுவினருக்கும், கமலுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.