Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

என்றும் இளமை எப்படி...? மெல்லப்பேசும் நடிகர் ராம்கி!!

10 பிப், 2013 - 15:30 IST
எழுத்தின் அளவு:

ரஜினி, கமல் என்ற மெகா ஸ்டார்கள் கொடி கட்டி பறந்த சமயத்தில்,"சின்னப்பூவே மெல்லப் பேசு என சத்தமில்லாமல் இளசுகளின் "யூத்தாக அறிமுகமானவர் நடிகர் ராம்கி. "செந்தூரப்பூவே மூலம், ஆக்ஷனிலும் சிறகை விரித்தார். "இணைந்த கைகள் மூலம் ஆக்ஷன் மற்றும் காமெடியிலும் ஜொலித்தார். "ஆஹா என்ன பொருத்தம், என காமெடி படங்களிலும், பாளையத்தம்மன், படை வீட்டம்மன் பக்தி படங்களிலும் தலைகாட்டினார். தொடர்ந்து 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், 2007ம் ஆண்டு "குற்றப்பத்திரிகை படத்தில் நடித்ததுடன், சினிமாவை விட்டே ஒதுங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, வெங்கட் பிரபு இயக்கத்தில், "பிரியாணி, பத்மராஜன் இயக்கத்தில் "மாசாணி படம் மூலம், ரீ... என்ட்ரி ஆகிறார் ராம்கி. அன்று பார்த்தது போல், அதே இளமையுடன் இன்றும் இருப்பது, ஆச்சரியம். வயல்வெளி வாசத்தில், வாலிப மிடுக்கோடு படப்பிடிப்பில் நடித்தவரை, பேட்டிக்காக பேச்சு கொடுத்தோம்.

""மதுரை கோ.புதூர் எனது சொந்த ஊர். படித்தது அமெரிக்கன் கல்லூரி. படிக்கும் காலத்தில், படித்ததை விட "கட் அடித்தது தான் அதிகம். மதுரை குசும்பு அத்துபிடி. அப்போதே ஒட்டி கொண்டு விட்டது. சினிமா நேசத்தால், வீட்டை விட்டு விரட்டி விடப்பட்டவன். சென்னை சென்று, பிலிம் டெக்னாலஜி படித்தேன். ஆபாவாணனும் நானும் "கிளாஸ்மேட். ஏழு ஆண்டுகள் உதவி இயக்குனர். அதன்பிறகு மெல்ல சினிமா வாசம்.  இதுவரை தமிழில் 65, ஆந்திராவில் 15 படங்கள் நடித்துள்ளேன். இந்தியாவிலேயே "டி.டி.எஸ். மூலம் எடுக்கப்பட்ட கருப்பு ரோஜா படம் நான் நடித்தது தான், என்றவரிடம் கேட்ட கேள்விகளுக்கு அளித்த "பட்பட் பதில்கள்..

* உங்களுக்கு காமெடி நல்லா வருதே?

மதுரைக்காரங்களுக்கு சொல்லியா கொடுக்கணும், காமெடியனாக நடிக்க... அட போங்கப்பு...

* யாருடைய காமெடி பிடிக்கும்?

எல்லாரையும் பிடிக்கும். வடிவேலுவின், "ஆணியே புடுங்க வேண்டாம், காமெடியை, நானே இப்ப "யூஸ் பண்ணிட்டு வர்றேன்.

* அன்று இருந்த நகைச்சுவை இன்று இல்லையே? ஏன்?

முன்பு காமெடிக்கு தனி ஆட்கள இருந்தனர். இன்று, அவர்களே தயாரிப்பாளர்கள், டெக்னீசியனாக மாறி வருகின்றனர். வசனம் எழுதுபவர்கள் பற்றாக்குறையும் ஒரு காரணம்.

* காதல் படங்கள், ஆக்ஷன் படங்கள், உங்களுக்கு வெற்றியை தந்தது எது?

சின்ன பூவே மெல்லபேசு 150 நாள், செந்தூரப்பூவே லவ் பிளஸ் ஆக்ஷன். தங்கச்சி என்ற படம் ஆக்ஷன். மருதுபாண்டி ஆக்ஷன் படம். அதிக அளவு வெற்றியை தந்தது ஆக்ஷன் படங்கள் தான். ஆனால், எனக்கு பிடித்தது காமெடி படங்கள்.

* உங்களை கவர்ந்த இயக்குனர்?

பாரதிராஜா. அவர் படத்தில் நடித்ததில்லை. அவர் திறந்த கதவு மூலம், சினிமாவில் ஜெயித்தவர்கள் ஏராளம்.

* தீவிர ஐயப்ப பக்தராமே நீங்கள்?


உண்மைதான். சிறுவயது முதலே, ஐயப்பனிடம், ஈடுபாடு. தற்போது 365 நாளும் மாலை போட்டு வருகிறேன்.

* உங்களின் இளமையின் ரகசியம்?

கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக, சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறேன். சிகரெட் கிடையாது. தியானம். மனது இளமையாக இருக்க வேண்டும். மனம் குழப்பமாக இருந்தால் முகம் காட்டி கொடுத்துவிடும்.

* ரொம்ப நாளா சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டீர்களே. ஏன்? இடைவெளியில் எங்கு சென்றீர்கள்?

இலங்கையில் "மெகா சீரியல் எடுக்க சென்றதால், தொடர்ந்து அங்கேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. போர் வந்ததால், இந்தியாவில், உள்ளவர்கள் அங்கு இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பிறகு தமிழகம் வந்தேன்.

* நீங்கள் நடிக்கும் "மாசாணி பற்றி?

மாசாணி மூலம் மீண்டும் ஒரு சந்திரமுகியை பார்க்கலாம்.

* மீண்டும் "இணைந்த கைகள் வெளிவருமா?

ஆபாவாணன், அதற்கான முயற்சியில் ஈடுபடுவார் என நம்புகிறேன்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

skaruna - selangor,மலேஷியா
10 ஏப், 2013 - 23:21 Report Abuse
skaruna நல்ல நடிகர்,மற்றும் எதிபார்த்த நடிகர் மீண்டும் வந்தது சிறப்பு.
Rate this:
skaruna - selangor,மலேஷியா
10 ஏப், 2013 - 23:20 Report Abuse
skaruna மீண்டும் ராம்கி சார்,நடிக்க வந்தது சந்தோசம் .திறமை சாலிகள் கண்டிப்பாக உயர வேண்டும்..நன்று
Rate this:
n. selvam - villupuram,இந்தியா
11 பிப், 2013 - 10:30 Report Abuse
 n. selvam I am selvam from villupuram . Iam very happy and wishes for your re-entry .
Rate this:
brucesiva - chennai,இந்தியா
11 பிப், 2013 - 08:50 Report Abuse
 brucesiva நல்ல நடிகர் மீண்டும் வெள்ளி திரையில் பயணம் தொடர வாழ்த்துகள்
Rate this:
சரவணன் - Chennai,இந்தியா
11 பிப், 2013 - 00:57 Report Abuse
 சரவணன் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பேட்டியை தினமலரில் பார்த்தது சந்தோசம்... மீண்டும் உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும்.. வாழ்த்துக்கள்...
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in