Advertisement

சிறப்புச்செய்திகள்

சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொறுப்புடன் பேசுங்க : ரஜினிக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் அட்வைஸ்

19 அக், 2022 - 11:53 IST
எழுத்தின் அளவு:
Speak-responsibly-:-Judge-Aruna-Jagatheesan-advises-Rajinikanth

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆணையம், அவர் பொறுப்புடன் பேச வேண்டும் என்ற அறிவுரையும் வழங்கி உள்ளது.

இது தொடர்பாக ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தென்னிந்தியாவின் புகழ் பெற்ற நடிகரான ரஜினிகாந்த், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தனது வீட்டில் வைத்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த முதல் பேட்டியில் சில கருத்துகளை கூறியிருந்தார். அது முழுக்க முழுக்க அரசு இயந்திரம் செயல்படாமல் போனதாலும், உளவுத்துறையின் தோல்வியாலும்தான் நடந்த சம்பவம் என்றும், அதனால் தான் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

சென்னை விமான நிலையத்தில் அளித்த தனது 2-வது பேட்டியில், ஊர்வலத்தில் சில சமூக விரோதிகள் நுழைந்து காவல் துறையினர் மீது தாக்குதலை நடத்தினர் என்றும் ஆட்சியர் அலுவலகத்தை உடைத்து, ஸ்டெர்லைட் அலுவலர் குடியிருப்பில் தீ வைத்தனர் என்றும் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

ஆணையத்தின் விசாரணையின் போது சமூக விரோதிகள் மூலமாகத் தான் அப்படி நடந்திருக்க முடியும் என்று தான் நம்பி கருத்து கூறியதாகவும், ஆனால் அந்த கருத்துகளுக்கான அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லை என்பதை ரஜினிகாந்தே பின்னர் தெளிவாக விளக்கம் அளித்தார். மேலும் தனது கருத்துகளுக்கான ஆவணங்கள், ஆதார அம்சங்கள், அதுதொடர்பான ஊடக தகவல்கள் எதுவும் தன்னிடம் இல்லை என்பதையும் மிக நேர்மையாக தெரிவித்தார்.

மக்கள் மீதான தாக்குதல் பற்றிய கருத்தை கூறும்போது ஆதாரம் இருப்பது அவசியம். அதை அவர் சரிபார்க்க வேண்டும் அந்த கருத்து பல பின்விளைவுகளுக்கு காரணமாகிவிடும். சமூகத்தில் புகழ் பெற்றவர்களால் கூறப்படும் இதுபோன்ற கருத்துகள், பிரச்னையை தீர்ப்பதற்கு பயன்படாமல் அதை அதிகரிக்கச் செய்துவிடும். எனவே அதுபோன்றவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், சினிமா நடிகர்கள் இதுபோன்ற கருத்துகளை தவிர்ப்பது நல்லது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய
ஜப்பான் நாட்டில் வெளியாகும் 'ஆர்ஆர்ஆர்'ஜப்பான் நாட்டில் வெளியாகும் ... ஐ எம் வெயிட்டிங்: அடுத்த ரவுண்டுக்கு தயாரான பிரணிதா ஐ எம் வெயிட்டிங்: அடுத்த ரவுண்டுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (20)

V. Kanagaraj - coimbatore,இந்தியா
25 அக், 2022 - 14:19 Report Abuse
V. Kanagaraj அப்பா
Rate this:
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
22 அக், 2022 - 21:54 Report Abuse
Kalaiselvan Periasamy தரமற்றவர்களை நீதிபதியாக போட்டால் இப்படித்தான் . சாதாரண மக்கள் யாவரும் நால்வர் இல்லை . அவர்களிலும் அயோக்கியர்கள் உக்கனர் என்பதை ஏன் நாம் உணர மறுக்கிறோம் ?
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
22 அக், 2022 - 21:24 Report Abuse
கல்யாணராமன் சு. அதே தூத்துக்குடி சம்பவத்தில் கலவரமே நடக்கலை, மக்கள் அமைதியாகத்தான் போராடினார்கள் என்று சொன்ன திருமாவளவன், சீமான், டாலின், 25 கோடி கம்மிகள் பேசியதெல்லாம் பொறுப்புடன்தான் நடந்துகொண்டார்களா ? மக்கள் அமைதியாக போராடினார்கள் என்றால் வாகனங்களுக்கு, அலுவலகங்களுக்கு தீ வைத்தது யார் ? போலீசே தீ வெச்சாங்களா ?? ஆணையத்துக்கு கொடுக்கப்பட்ட brief என்ன ? அந்த போராட்டத்திலே சமூக விரோதிகள் இருந்தார்களா என்று கண்டுபிடிப்பதும்தானே ? அதை ஏன் பண்ணலை ???? காரணம் ரொம்ப எளிது: அடுத்த ஆணையத்துக்கு தலைவியாக துண்டு போட்டாச்சு ..... ராஜன், அரி பரந்தாமன், சந்துரு, ஆறுமுகசாமி, அருணா ஜெகதீசன் எல்லோரும் நல்வாழ்வு வாழ விடியல் அரசு துணை போகும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது .... லிஸ்டில் இருக்கும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் ...........
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
21 அக், 2022 - 12:46 Report Abuse
Sridhar அப்போ அவுரு சொன்னபடி நடக்கவில்லை என்பதற்கு இந்த அம்மாவிடம் ஆதாரம் இருக்கா? சமீபத்துல கூட நிறைய வீடியோ சமூக வலயத்தில் பாத்தோமே? சமூக விரோதிகள் போலீசை அடித்து மிதித்துக்கொண்டு இருந்தார்களே? இந்த அம்மா கொஞ்சம் சீட்டை விட்டு எழுந்து தேடினால் நிறைய ஆதாரம் கிடைக்குமே? ஏன்? லாபகரமான விஷயம் இல்லையோ? சரி, இதை விடுவோம். அந்த ஆளு ஏன் அப்படி சொன்னாரு? அவருக்கு இருக்கற வசதிக்கு, ஆதாரங்களை தேடி அடுக்குவது ஒன்றும் பெரிய சிரமமான விஷயம் இல்லையே? பயந்துட்டாரா? என்னய்யா நடக்குது நாட்டுல?
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
21 அக், 2022 - 05:13 Report Abuse
NicoleThomson அம்மா நீங்க பொறுப்புள்ளவங்க என்றால் கட்சி சார்ந்த ஊடகங்களின் தரத்தையும் அளவுக்கதிகமாக விமரிசித்து இருக்கணும், அவர்களின் ரோல் தூத்துக்குடியில், சாத்தன்குளத்தில், சிறுவன் சுஜித் மரணத்தில் என்று எல்லாவற்றிலும் அதிகம் இருந்தது எங்கே போயிருந்தீர்கள் தாயே?
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in