பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

தற்போது பெயரிடப்படாத விஷ்ணுவர்த்தனின் படத்தில் நடித்து வரும் அஜீத், அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், அந்தப் படத்திற்கு "ரெட்டைதலை" என்று பெயர் வைத்திருப்பதாகவும், அஜீத் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதனை ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நானும் அந்த செய்திகளை படித்தேன். சரி நல்ல விஷயம்தானே என்று பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால் அவை எல்லாமே யூகத்தின் அடிப்படையிலான செய்திகள்தானே தவிர உண்மையில்லை. அஜீத்துடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. அவருக்கும் உண்டு. ஆனால் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. வரும்போது சேர்ந்து பணியாற்றுவோம். நான் இப்போது "துப்பாக்கி" இந்தி ரீமேக்கில் பிசியாக இருக்கிறேன். அக்ஷய்குமார், சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார்கள். இதற்கே எனக்கு ஒரு வருடம் ஆகிவிடும், பொதுவாக நான் பெரிய பட்ஜெட்டில் ஆக்ஷன் படங்கள்தான் இயக்குகிறேன் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதை மாற்றும் வகையில் சிறிய பட்ஜெட்டில் புதுமுகங்களை வைத்து ஒரு காதல் படம் எடுக்கும் எண்ணமும் இருக்கிறது. கமல் சாரை வைத்து உலக தரத்தில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. என்றார்.