மோசடி புகாரில் சிக்கிய கேரள நடிகை ஷாலுமேனன்! | வணக்கம் சென்னை ஆடியோ விழாவில் கருணாநிதி கலந்து கொள்கிறாராம்! | சினிமா வாய்ப்புகளுக்காக அலையவில்லை என்கிறார் சினேகா! | சமுத்திரகனியுடன் இணைகிறார் ஜீவா! | தமிழ் ஆசான்களிடம் சிக்கிய ஐ பட நாயகி எமிஜாக்சன்! | பிகினி உடையில் திரியும் நமீதா! | விரைவில் சித்தார்த்-சமந்தா திருமணம்! | மேல்முறையீடுக்கு செல்கிறது மரியான்! | ஸ்ருதி ஹாசனுக்கு அடித்தது அதிர்ஷ்டம் | அரசியலில் திவ்யா செல்வாக்கு கிடு கிடு |
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி ஹிட்டான படம் "சோலோ". தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் தம்பி மகன் ரோஹித் ஹீரோவாக அறிமுகமான படம். காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தப் படத்தை இப்போது தமிழில் டப் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். "என் காதலுக்கு நானே வில்லன்" என்று பெயரும் வைத்திருக்கிறார்கள். பரசுராம் இயக்கி உள்ளார். தன் திருமணத்தின் மூலம் உறவினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் ஹீரோ. தன் தங்கையின் திருமணம் மூலம் நிறைய உறவுகளை பெற வேண்டும் என்று நினைக்கும் ஹீரோயின். இருவருக்கும் காதல் வந்து அதன் பிறகு நடக்கும் உறவு குழப்பங்களை ஜாலியாக சொல்லும் படம்.