ஜெயம் ரவியின் ஆசை ஜெயமாகப்போகிறது! | காதல் சந்தியாவிடம் சில்மிஷம் செய்த சந்தானம்! | பிரகாஷ்ராஜின் விவசாயி கனவு! | தயாராகிறது ரஜினியின் சந்திரமுகி-2 ? | திரையுலக வாழ்க்கையில் கிசுகிசுக்கள் சாதாரண விஷயம்: பிபாஷா பாசு | ஹாலிவுட் படம் இயக்கும் பி.வாசு | பாலா - எஸ்.ரா., மீண்டும் கூட்டணி | விரைவில் திலோன் ரேஞ்சர் | தமிழில் பேசி பழகலாமே ; தீபிகாவுக்கு ஷாரூக் அறிவுரை | யாருக்கு கல்யாணமானா எனக்கென்ன? உச்சக்கட்டகோபத்தில் அனுஷ்கா |
சினிமா நட்சத்திரங்கள் விளையாடும் சிசிஎல் (செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்) கிரிக்கெட் போட்டிகள் நாளை தொடங்குகிறது. சென்னை ரைய்னோஸ் என அழைக்கப்படும் தமிழக அணிக்கு விஷால் கேப்டனாகவும், விக்ராந்த் துணை கேப்டனாகவும் தொடர்கிறார்கள். ரமணா விக்கெட் கீப்பர். ஆர்யா, ஜீவா, சிவா, விஷ்ணு, சாந்தனு, ப்ருத்வி, ரிஷிகாந்த், அப்துல்லா, உதயகுமார், பரத், ஜித்தன் ரமேஷ், ஷாம், ஸ்ரீபாலாஜி ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். நாளை (9ம் தேதி) கொச்சியில் போட்டிகள் தொடங்குகிறது. முதல் போட்டியிலேயே சென்னை அணி போஜ்புரி அணியை எதிர்கொள்கிறது. அதன் பிறகு 16ம் தேதி கர்நாடக அணியையும், 17ம் தேதி மும்பை அணியையும், மார்ச் 2ம் தேதி பெங்காலி அணியையும் எதிர்த்து விளையாடுகிறது. மார்ச் 9ம் தேதி ஐதராபாத்தில் அரையிறுதி போட்டியும், 10ம் தேதி பெங்களூருவில் இறுதி போட்டியும் நடக்கிறது. கடந்த ஆண்டு சேம்பியன் ஆன சென்னை அணிக்கு இந்த ஆண்டு சவால் மிக்கதாக இருக்கும். கடுமையான போட்டிகளை சந்தித்து கோப்பையை தக்க வைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.