பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
"களவாணி ஓவியாவுக்கு "சில்லுன்னு ஒரு சந்திப்புக்கு பின், தமிழில் எந்த படமும் கமிட்டாகவில்லை. இதையடுத்து, தாய்மொழியான மலையாளத்திலும், தீவிர முயற்சி எடுத்தார். அங்கும், போதிய வாய்ப்புகள் இல்லாமல் போகவே, இப்போது கன்னட சினிமாவில் மறுபிரவேசம் செய்துள்ளார். ஏற்கனவே, கன்னடத்தில் சில படங்களில் நடித்த ஓவியா, ரசிகர்களுக்கு நல்ல பரிட்சயமானவர் என்பதால், சில இயக்குனர்கள், அவருக்கு, ஹீரோயின் வாய்ப்பு கொடுத்துள்ளனராம். இந்த நேரத்தில் ஓவியா, யாரையோ காதலிப்பதாக புதிய செய்தி ஒன்று வேகமாக பரவியுள்ளது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, "ஒரு பேட்டியில், காதலித்து தான் திருமணம் செய்வேன் என்று கூறினேன். ஆனால், அவர்கள் நான் காதலித்து வருவதாக செய்தியை மாற்றிவிட்டனர் என்று விளக்கம் தரும் ஓவியாவுக்கு, இன்னும் காதலரே செட்டாக வில்லையாம். மனசுக்கு பிடித்தமானவரை தேடிக் கொண்டுதான் இருக்கிறாராம்.