ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
த்ரிஷா தெலுங்கில் தற்போது நடித்து வரும் படம் "ரம்". ரம்பா, ஊர்வசி, மேனகா என்ற பெயர்களின் முதல் எழுத்தைக் கொண்டு இந்தப் பெயர் படத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் ரம்பாவாக திரிஷாவும், ஊர்வசியா நிகிஷா பட்டேலும், மேனகாவாக இஷா சாவ்லாவும் நடிக்கிறார்கள். கூடுதலாக ஷார்மியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆக மொத்தம் நான்கு ஹீரோயின். படத்தில் ஹீரோ கிடையாது. இந்த நான்கு ஹீரோயின்கள்தான் அழகும் காட்டுகிறார்கள், ஆக்ஷனும் பண்ணுகிறார்கள். தமிழ், கன்னட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.
ஒரு கொலைக் குற்றவாளியை கண்டுபிடிக்க வெளிநாட்டுக்கு செல்லும் ஸ்பெஷல் பெண்கள் படையை சேர்ந்தவர்கள் இந்த ஹீரோயின்கள் இவர்கள் எப்படி குற்றவாளியை கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் கதையாம். தற்போது மஸ்கட்டில் படப்பிடிப்பு நடக்கிறது. நான்கு ஹீரோயின்களும் ஜாலியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். "ரம் படத்துல சந்தோஷமாக நடிச்சிட்டிருக்கேன். இஷா, நிகிதா, ஷார்மி என்னோட திக் பிரண்டாயிட்டாங்க" என்று டுவிட்டரில் சொல்லியிருக்கும் த்ரிஷா அருகில் உள்ள படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.