Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நானே எதிர்பார்க்காத வெற்றி! ரசிகர்களுக்கு நன்றி! கமல் பேட்டி!!!

07 பிப்,2013 - 16:44 IST
எழுத்தின் அளவு:

 விஸ்வரூபம் படத்திற்கு தானே எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றி கிடைத்திருப்பதாகவும், இந்த வெற்றியை தேடித்தந்த ரசிர்களுக்கு தான் என்றும் கடமைபட்டு இருப்பதாக கமல் கூறியுள்ளார். கமலின் விஸ்வரூபம் படம் தடைகள் பல கடந்து தமிழகத்தில் இன்று(பிப்.7) ரிலீஸாகியுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் கமல்ஹாசன். அப்போது அவர் பேசுகையில், விஸ்வரூபம் படத்திற்கு தடை ஏற்பட்டபோது எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய ரசிகர்கள் பலர் கசோலையாகவும், பணமாகவும், தங்களது வீட்டு சாவிகளையும் எனது இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களின் அன்பு அளவிட முடியாதது. அவர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

விஸ்வரூபம் படத்திற்கு நானே எதிர்பாராத அளவுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சமூகத்தில் தனக்கு உள்ள கடமையை ரசிகர்கள் தமது அன்பால் புரிய வைத்துள்ளனர். சக கலைஞர்களின் பாராட்டு தம்மை புதிய உத்வேகத்துக்கு அழைத்து சென்றுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது பிறமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை ரிலீஸ் செய்ய உதவிய தமிழக முதல்வருக்கும், ஊடக பங்காளிகளுக்கும், சக கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டும், இப்படத்தை அவர் பார்க்கவும் அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பியுள்ளேன்.

இந்த படத்திற்கு கிடைத்துள்ள விமர்சனங்களை பற்றி எனக்கு கவலையில்லை. பலர் இப்படத்தை பார்த்து என்னை பாராட்டியுள்ளனர். அந்த பாராட்டு ஒன்றே எனக்கு போதும். எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது, எனக்கு தெரிந்தது எல்லாம் சினிமா மட்டும் தான். கலைஞர்களை கலைஞர்களாக பாருங்கள், அவர்களை வளர விடுங்கள், விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட பிரச்னைகள் போன்று மீண்டும் எனது படங்களுக்கு இதுபோன்று பிரச்னை ஏற்பட்டால் நிச்சயமாக நான் இந்த நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று மீண்டும் ஒருமுறை கூறி கொள்கிறேன். டி.டி.எச். ரிலீஸ் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேசி முடிவெடுத்து விரைவில் அறிவிப்பேன்.

விஸ்வரூபம் படம் தொடர்பாக விஷாலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விஷயத்தில் தம்பி விஷாலுக்கு குரல் கொடுக்க நான் தயார். ஏற்கனவே சொன்னது தான். நான் எப்பவும் போல் அனைவருக்கும் அன்பை கொடுக்கிறேன். ஆனால் அவர்கள் திருப்பி அதே அன்பை நம் மீது காட்டுவார்கள் என்று எதிர்பார்க்ககூடாது.

விஸ்வரூபம் படத்தை தொடர்ந்து விஸ்வரூபம் பார்ட்-2 வர இருக்கிறது. அதனைத்தொடர்ந்து ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரிஆஸ்பன் தயாரிக்கும் ஒருபடத்திலும், பிறகு எனது நிறுவனத்திலேயே மூ என்று ஒரு படத்தையும் இயக்க உள்ளேன்.

இவ்வாறு கமல் கூறினார்.

Advertisement
விஸ்வரூபம் பார்த்தார் ரஜினிவிஸ்வரூபம் பார்த்தார் ரஜினி மஸ்கட்டில் மல்லுக்கட்டும் த்ரிஷா மஸ்கட்டில் மல்லுக்கட்டும் த்ரிஷா

வாசகர் கருத்து

sibi - chennai,இந்தியா
12 பிப்,2013 - 23:12
sibi விஸ்வரூபம் - தரமான படம் குடுத்த உங்களுக்கு நன்றி
sankar - trk,இந்தியா
09 பிப்,2013 - 13:27
 sankar good flim
Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
08 பிப்,2013 - 19:33
Neelaa எனக்கு அரசியல் தெரியாது - என்று சொல்லி விட்டு,(அரை வேக்காட்டாக) மார்க்சிஸ் தத்துவம் மற்றும் நாத்திகம் பேசியும், சமயங்களையும் (குறிப்பாக ஹிந்து) சமூகத்தையும் (குறிப்பாக பிராம்மண சமூகம்) தேவை இல்லாமல் ஏளனம் செய்தும், கலைஞர் முதல் ஜெயலலிதா வரை தேவைக்கு ஏற்றபடி ஆளும் கட்சியினரின் அடி வருடியும், சுய ஒழுக்கம்,நெறி என்று ஒன்றும் இல்லாமல் வாழ்ந்து பிழைக்கும் இவரை யார் வெறும் கலைஞன் என்று எடுத்துக்கொள்வது? அரசியல்வாதிகளும் இது போல் தானே வாழ்கிறார்கள்?
ஏடு கொண்டலு - chennai,இந்தியா
08 பிப்,2013 - 10:11
ஏடு கொண்டலு கமல் அவர்களே, உங்கள் படத்தின் வெற்றிக்கு உங்கள் ரசிகர்கள் மட்டும் காரணமல்ல. உங்கள் பேச்சுரிமையை ஒரு கூட்டம், அரசின், நீதிமன்றத்தின் துணையுடன் பறித்ததனால் சினமுற்ற மற்றவரும் தான்.
Jeeva - Chennai  ( Posted via: Dinamalar Android App )
08 பிப்,2013 - 09:39
Jeeva தமிழ்ப்பற்று
natarajan - chennai,இந்தியா
08 பிப்,2013 - 06:29
 natarajan ரஜினி விஸ்வரூபம் பார்த்ததெல்லாம் ஒரு செய்தியா? அவருக்கு இந்தமாதிரி படமெல்லாம் புரியாதே...
விருமாண்டி - மதுரை,இந்தியா
08 பிப்,2013 - 02:53
விருமாண்டி உங்கள் ரசிகர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள் நீங்கள் எதற்கும் கவலைப் படவேண்டாம் ..விஸ்வரூபம் பார்ட் 2 வெளிவர வாழ்த்துக்கள்
கோவிந்த் - Delhi,இந்தியா
08 பிப்,2013 - 02:03
 கோவிந்த் " ஊடக பங்காளிகளுக்கும் " கமல் தான் எப்போதும் நல்ல தமிழில் பேசுகிறார். வாழ்க அவருடையை தமிழ் பற்று !
Advertisement
தொடர்புடைய வால் பேப்பர்கள்
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Puriyatha Anandham Puthithaga Arambam
    Tamil New Film Irandu manam vendum
    Tamil New Film Idly
    • இட்லி
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : கோவை சரளா, சரண்யா, கல்பனா
    • இயக்குனர் :கே.பி.வித்யாதரன்
    Tamil New Film Papanasam
    • பாபநாசம்
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : ,கெளதமி
    • இயக்குனர் :ஜீது சோசப்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in