Advertisement

சிறப்புச்செய்திகள்

துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |

விஸ்வரூபம் பார்த்தார் ரஜினி

07 பிப், 2013 - 15:01 IST
எழுத்தின் அளவு:

தடைகளை தாண்டி விஸ்வரூபம் இன்று தமிழ்நாடு முழுவதும் அமோக வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் சிறப்பு காட்சியை கமல் நேற்று சத்யம் சினிமாஸ் வளாகத்தில் உள்ள 6 டிகிரி தியேட்டரில் திரையிட்டுக் காட்டினார். இந்த தியேட்டரில்தான் ஆரோ 3டி ஆடியோ தொழில்பட்ப வசதி உள்ளது. இந்த சிறப்பு காட்சிக்கு ஜெயராம், சுஹாசினி, குஷ்பு, பிரபு, யுவன், கார்த்திக் ராஜா, பார்த்திபன், உள்பட பல திரையுலக பிரகமுகர்கள் வந்து படத்தை கண்டு களித்தார்கள். கமல் தியேட்டர் வாசலில் நின்று அனைவரையும் புன்னகையுடன் வரவேற்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டில் உள்ள மினி தியேட்டரில் விஸ்வரூபம் திரையிட்டுக் காட்டப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தார் செய்திருந்தனர். ரஜினி, தன் மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோருடன் பார்த்தார். படம் பார்த்து முடித்ததும் கமலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். "கமல் உங்க ஹார்ட் ஒர்க் பார்த்தேன் எக்ஸ்லெண்ட். டிபெனட்டா அதுக்கான பெனிபிட் உங்களுக்கு கிடைக்கும். உங்க பிரண்டுங்றதுல எனக்கு இன்னும் பெருமை ஜாஸ்தியாய் இருக்கு" என்று குறிப்பிட்டாராம்.

வருகிற 10ந் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் விஸ்வரூபத்தின் பிரீமியர் ஷோ இருக்கிறது. இதற்காக கமல் பூஜாகுமார், சேகர் கபூர் உள்ளிட்ட தனது விஸ்வரூபம் டீமுடன் 9ந் தேதி இரவு புறப்பட்டுச் செல்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Akash - Bangalore,இந்தியா
11 பிப், 2013 - 09:15 Report Abuse
 Akash Excellent Movie
Rate this:
மொக்கையன் - chennai,இந்தியா
09 பிப், 2013 - 11:32 Report Abuse
 மொக்கையன் உலக நாயகரே இது நியாயமா ?? தலைவர் மட்டும் விட்டுலே படம் பார்க்கலாம் .... நாங்க திரை அரங்கம் வந்து பார்க்கணுமா ... அவரு வசதியானவரு ... நாலு கோடியில மினி திரை அரங்கத்துல பார்க்குறாரு ... நாங்க எழையுங்க ... 40 ரூபா ல DVD ல பார்க்க ஆசை படறோம் !
Rate this:
K.RAJA WF - singapore  ( Posted via: Dinamalar Android App )
07 பிப், 2013 - 16:00 Report Abuse
K.RAJA WF தலைவா இத்தி்ரைப்படம் கன்டிப்பாக சரித்தி்ரம் படைக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in