Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மணிரத்னத்துக்கு மட்டுமே விதிவிலக்கு- சொல்கிறார் அர்ஜூன்

07 பிப், 2013 - 14:38 IST
எழுத்தின் அளவு:

ஆக்சனுக்கு பேர்போன அர்ஜூனுக்கு சமீபகாலமாக ஹீரோ வாய்ப்புகள் கிடைக்காததால் தனது ரூட்டை மாற்றுகிறார். வசந்த் இயக்கி வரும் 3 பேர் 3 காதல் படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருப்பவர், தற்போது வெளியாகியுள்ள மணிரத்னத்தின் கடல் படத்தில் அதிரடி வில்லனாக உருவெடுத்திருக்கிறார். அப்படம் திரைக்கு வரும் வரை அர்ஜூன் அந்த மாதிரி ஒரு வேடத்தில் நடித்திருப்பார் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் படத்தைப்பார்த்து விட்டு அர்ஜூனா இப்படி அதிரடி வில்லனாக நடித்திருக்கிறார் என்று ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், மேலும் சில இயக்குனர்களும் அர்ஜூனை தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடிக்க வைக்கும் முயற்சியிலும் இறங்கினர். ஆனால் அதற்கு மறுத்து விட்டார் அர்ஜூன். மணிரத்னம் எனக்கு மிக பிடித்தமான இயக்குனர். அதனால்தான் அவர் கடல் படத்துக்கு என்னை அழைத்தபோது என்ன கதை, என்ன கேரக்டர் என்றுகூட கேட்காமல் நடித்தேன். அது வில்லன் என்று தெரிந்தபோதுகூட எனக்கு வருத்தமோ, வெறுப்போ கிடையாது. மணிரத்னம் சொன்னால் எந்த மாதிரியான வேடத்திலும் நடிக்க வேண்டும் என்கிற எண்ணமே என் மனதளவில் இருந்ததால் அந்த கதாபாத்திரத்தை முழுசுமாக உணர்ந்து அனுபவித்தே நடித்தேன் என்கிறார் அர்ஜூன்.

Advertisement
ஆர்யாவை அரவணைத்த டாப்சி!ஆர்யாவை அரவணைத்த டாப்சி! விஸ்வரூபம் பார்த்தார் ரஜினி விஸ்வரூபம் பார்த்தார் ரஜினி


வாசகர் கருத்து (3)

lotus - kulamangalam  ( Posted via: Dinamalar Android App )
08 பிப், 2013 - 14:54 Report Abuse
lotus கத்தி்ரிக்கா முத்துணா கடைத்தெருவுக்கு வந்தாகனுமே
Rate this:
siva - tripur,இந்தியா
08 பிப், 2013 - 09:33 Report Abuse
 siva மணிரத்தினம் ஒரு வெத்து சோறு .....எதுக்காக இப்படி ஓவரா தலையில் தூக்கி வெச்சு ஆடறாங்க தெரில...
Rate this:
எஸ்.பானு - gummudipundi,இந்தியா
08 பிப், 2013 - 01:47 Report Abuse
 எஸ்.பானு ஆக்சன் சரியான இழுவையா இருக்காரு. மணிரத்தினம் புடிச்ச டைரக்டர்னா, மத்தவா எல்லாம் புடிக்காத டைரக்டரா? மணி படமே ஓடுறதில்லே சும்மா என்ன சலம்பிகிட்டு?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்
தொடர்புடைய வீடியோக்கள்
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mannar Vagaiyara
    • மன்னர் வகையறா
    • நடிகர் : விமல்
    • நடிகை : ஆனந்தி
    • இயக்குனர் :பூபதி பாண்டியன்
    Tamil New Film Iravukku Aayiram Kangal
    Tamil New Film Seyaal Movie
    • செயல்
    • இயக்குனர் :ரவி அப்புலு
    Tamil New Film Kombu
    • கொம்பு
    • நடிகர் : லொள்ளுசபா ஜீவா
    • நடிகை : திஷா பாண்டே
    • இயக்குனர் :இ. இப்ராகிம்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in