Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அம்மா, அப்பா ஆகிவிட்டோம் : இரட்டை ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்

09 அக், 2022 - 19:49 IST
எழுத்தின் அளவு:
Nayanthara---Vignesh-Shivan-welcomes-Twin-baby-boy

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியருக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. நாங்கள் அம்மா, அப்பா ஆகிவிட்டோம் என விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனும் இவர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். நீண்டநாள் காதலர்களாக வலம் வந்த இவர்கள் கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சென்னையில் உள்ள கடற்கரை ஒன்றில் பிரம்மாண்டமாய் இவர்களது திருமணம் நடந்தது. தொடர்ந்து ஹனிமூனுக்காக வெளிநாடு சென்று வந்தனர்.

இந்நிலையில் இந்த தம்பதியர் திடீரென தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கூறி குழந்தைகளின் பாதங்களில் முத்தமிட்டு மகிழும் போட்டோவை பகிர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.



இதுதொடர்பாக விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு : ‛‛நயன்தாராவும், நானும் அம்மா, அப்பாவாகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அனைவரின் ஆசீர்வாதமும் தேவை. உயிர் மற்றும் உலகம்'' என தெரிவித்துள்ளார்.

வாடகைத்தாய் மூலம் இந்த தம்பதியருக்கு குழந்தை பிறந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் அதுபற்றி இருவரும் எதுவும் தெரிவிக்கவில்லை. ரசிகர்களும், திரையுலகினரும் நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 6 துவங்கியது : 20 போட்டியாளர்கள் களமிறக்கம் ; 100 நாட்கள் தாக்குபிடிக்க போவது யாரு?கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 6 ... சினிமாவில் இருந்து விலகி இசை தனி துறையாக வளரவேண்டும்: கமல்ஹாசன் சினிமாவில் இருந்து விலகி இசை தனி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
11 அக், 2022 - 10:33 Report Abuse
Bala Murugan இவர்கள் விஷயத்தை வைத்து மருத்துவக்குழு மற்றும் நீதிபதி குழு அமைத்து பேசுபொருள் ஆகிவிட்டது. இப்படி எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும்போது நயன் சிவன் நினைப்பது - சினிமாவை விட மிகுந்த பிரபலமாகி விட்டோம் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டு இருப்பார்கள்.
Rate this:
Vikaya வர் - Coimbatore,இந்தியா
10 அக், 2022 - 19:42 Report Abuse
Vikaya வர் ஆண்டவா ரொம்ப பரவாயில்லையே அப்பம் எங்கலுக்க்கும் இது மாதிரி ஒருமாசதுல குழந்தை கிடைக்குமா கடவுள் பரவாயில்லையே பணம் இருந்தால் என்ன வேணும்னாலும் செய்வர் போல
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
10 அக், 2022 - 17:18 Report Abuse
DVRR பிரியங்கா சோப்ரா ஷாருக்க்கான் போன்றவர்கள் தான் இவர்களுக்கு முன்னோடி
Rate this:
ram - mayiladuthurai,இந்தியா
10 அக், 2022 - 12:27 Report Abuse
ram அப்புறம் எதர்கு இவர்களுக்கு ஹனிமூன், பணம் படுத்தும் பாடு
Rate this:
10 அக், 2022 - 10:36 Report Abuse
சந்திரசேகர் படையப்பா ஸ்டைலில் சொன்னால் குழந்தை என்னுது. ஆனால் பெற்றவங்க நாங்கள் இல்லை
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in