சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! | ஸ்ருதிஹாசனை கவர்ந்த கிரிக்கெட் வீரர் ரெய்னா! | இணையதளத்தில் அஞ்சுஅரவிந்தின் ஆபாச படங்களை வெளியிட்டவர் கைது! | வனத்துறையினரை தாக்கிய கலாபவன் மணி தலைமறைவு! |
பெரும்பாலும், நான்வெஜ் உணவுகள் தங்களது உடம்பை பெருக்க வைத்து விடும் என்பதால் நடிகைகள் யாரும் அந்த உணவுகளை விரும்புவதில்லை. இருப்பினும் சில சமயங்களில் மிட்நைட் பார்ட்டிகளில் கலந்து கொள்ளும்போது மட்டும் நட்பு வட்டாரங்களில் அன்புத்தொல்லையில் சிக்கி புகுந்து விளையாடி விடுவார்கள். அப்படி அடிக்கடி சிக்கிக்கொள்ளக்கூடியவர் அனுஷ்கா. ஆரம்பத்தில் மதுவில் கைவைக்க மாட்டேன் என்று கண்டிசன் போட்டு விட்டு வருபவர், நேரம் போகப்போக தன்னை மறந்து மதுக்குளத்தில் இறங்கி விடுவார். அதோடு, தனக்கு மிக பிடித்தமான சிக்கன் பிரியாணி அயிட்டங்களையும் ஒரு பிடி பிடித்து விடுவார்.
ஆனால், அதன் எபக்ட் ஓரிரு நாட்களிலேயே அம்மணியின் முகமெங்கும் முகப்பருக்களை அள்ளிப்போட்டு விடுமாம். இதனால் அதையடுத்து மருத்துவ சிகிச்சையில் ஈடுபடும் அனுஷ்கா, அந்த பருக்கள் முகத்திலிருந்து மறையும் வரை கேமரா கண்களில் தோன்ற மாட்டாராம். இதனால் இயக்குனர்கள், அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை தள்ளி வைத்து விட்டு, மற்ற காட்சிகளை படமாக்குவார்களாம். இப்படி அடிக்கடி நடப்பதால். விவரம் தெரிந்த சில படாதிபதிகள், தங்கள் படங்களில் அனுஷ்கா நடிக்கிறபோது, அவர் பார்ட்டி வகையறாக்களில் புகுந்து விடாத வண்ணம் கிடுக்கிப்புடி போட்டு விடுகிறார்கள். இதனால் சிக்கனின் அலர்ஜியிலிருந்து காப்பாற்றப்படுகிறாராம் நடிகை.