ப்ரியா ஆனந்த் "குண்டு பார்முலா | "மேன் ஆப் ஸ்டீல் | பள்ளி பாட புத்தகத்தில்பிரியங்கா சோப்ரா | தீபிகாவிடம் நேற்று இல்லாத மாற்றம் | விஜய் - அமலா ஜோடி ரசிகர்கள் எதிர்பார்ப்பு | சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் திறப்பு | கிரிக்கெட் சூதாட்டம் : இந்தி நடிகர் கைது | வீடு திரும்பினார் டி.எம்.எஸ்! | சிங்கம்-2 ஆடியோ ரிலீஸ்: ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் | கால் கேர்ள் ஆக நடிப்பது ஏன்? சார்மி விளக்கம்!! |
வேள்வி, அரும்பு மீசை குறும்புபார்வை உள்பட சில படங்களில் நடித்தவர் ஹாசினி. நிறைய கதைகள் கேட்டு அதில் நல்லதாக செலக்ட் பண்ணித்தான் இந்த படங்களில் நடித்தார் ஹாசினி. ஆனால் என்ன நேரமோ அவர் நடிக்கிற எந்த படமும் ஓடுவதில்லை. அதனால் அடுத்தபடியாக சிறிய ஹீரோ படங்களில் நடிக்காமல் முன்னணி ஹீரோக்களின் படங்களாக கைப்பற்றி நடிக்க வேண்டும் என்ற உறுதியான முடிவில் இருக்கிறார். ஆனால், அப்படி நடிக்க வேண்டுமென்றால் உடலளவில் இன்னும் பளிச்சென்று கவர்ச்சி வெளிப்பட வேண்டும். அப்போதுதான் அதெல்லாம் சாத்தியமாகும் என்று சிலர் சொன்னதின் விளைவு, சமீபத்தில் அமெரிக்கா சென்று தனது உடம்பெங்கும் அழகு சிகிச்சை செய்து விட்டு திரும்பியிருக்கிறார் ஹாசினி.
இதனால் ஓரளவு சுமாரான கலரில் இருந்த நடிகை இப்போது சூப்பர் கலராகி விட்டாராம். அதையடுத்து, இதுவரை எடுக்காத அளவு படுகவர்ச்சியான ஆல்பம் ஒன்றையும் அவசரகதியில் தயார் செய்து கோலிவுட்டின் முன்வரிசை இயக்குனர்களின் பார்வைக்காக சுற்றலில் விட்டிருக்கிறார் ஹாசினி. ஆனால் பெரிய அளவில் அட்டாக் பண்ண வேண்டும் என்பதற்காக, படுகவர்ச்சியான உடைகளில் காமக்கொடூர அவதாரத்தை நடிகை எடுத்து விட்டதால், இவரை கதாநாயகியாக யூஸ் பண்ண முடியாது. வேண்டுமானால் குத்துப்பாட்டுகள் ஆடும் அயிட்டம் நடிகையாக்கலாம் என்று கருத்து சொல்கிறார்களாம் இயக்குனர்கள். இதனால் இதற்காகவா நான் அமெரிக்கா சென்று சிகிச்சை செய்து வந்தேன் என்று புலம்பி வருகிறார் நடிகை.