இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஜெட் லீயின் அடுத்த அதிரடியாக வருகிற "ப்ளையிங் ஸ்வார்ட்ஸ் ஆப் டிராகன் கேட்". 200 கோடி ரூபாய் செலவில் உருவாகி உள்ள இந்தப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். சீனா, ஜப்பானின் பாரம்பரிய கலையான குங்பூ, கராத்தே சண்டையை மையமாக வைத்து பல படங்கள் வந்திருந்தாலும் இதில் நவீன சினிமா தொழில்நுட்பத்தில் மிகவும் நேர்த்தியாக சண்டை காட்சிகளை படம் பிடித்திருக்கிறார்களாம். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ளதால் சண்டைக்கு நடுவில் நாம் மாட்டிக் கொள்வதை போன்ற உணர்வை ஏற்படுத்துமாம். ஜப்பான் பேரழகி ஜோ ஜான்தான் ஹீரோயின். அவர் அழகையும் பக்கத்தில் பார்க்கலாம். 1992ல் வெளிவந்த "நியூ டிராகன் கேட்" படத்தின் ரீமேக்தான் இந்தப் படம்.