சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
கமல்ஹாசன் சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டங்களில் சின்னச்சின்ன வேடங்களில்தான் நடித்து வந்தார். அந்த சமயத்தில் ஒரு படத்தில் உதட்டு முத்தக்காட்சியில் நடித்தவர், அதன்பிறகுதான் வெளிச்சத்துக்கு வந்தாராம். அப்போதைக்கு முத்தக்காட்சி நடிகர் என்பதே அவருக்கு அடையாளமாகியிருக்கிறது. அதனால் அதன்பிறகு தனது படங்களில் முத்தக்காட்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் கமல். அப்போது தொடங்கி இப்போதுவரை தனது படங்களில் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு முத்தக்காட்சியை இணைத்து விடுவதில் கவனமாக செயல்பட்டு வருகிறார் கமல்.
இந்நிலையில், இப்போது கமல் பாணியில் தனது படங்களிலும் ஒரு உதட்டு முத்தக்காட்சியாவது இருக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார் ஆர்யா. கண்ணன் இயக்கத்தில் நடித்துள்ள சேட்டை படத்தில் ஹன்சிகாவின் உதடு கவ்வி முத்தம் கொடுத்திருக்கும் ஆர்யா, அந்த காட்சியில் நடித்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு இனிமை சேர்த்த காட்சி அது என்று இன்னமும் அதை நினைத்தே ஜொள் ஊறிக்கொண்டு திரிகிறார். அதோடு, இனி நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் முத்தக்காட்சி வைக்குமாறு இயக்குனர்களை கேட்டுக்கொள்ளப்போகிறேன் என்று சொல்லும ஆர்யா, கமல் சார் மாதிரி என்னால் நடிக்க முடியாது.ஆனால் அவர் மாதிரி முத்தக்காட்சியில் நடிக்க முடியும். அதனால் இந்த ஒரு விசயத்தில் மட்டும் அவரது சிஷ்யனாக இருந்து அவர் இடத்தை பிடிக்கப்போகிறேன் என்கிறார் ஆர்யா.