அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமான எமிஜாக்சன் ஹாலிவுட் நடிகை என்றபோதும், தமிழ்நாட்டில் கிடைத்த வரவேற்பு காரணமாக, சமீபகாலமாக சென்னையிலேயே அதிக நாட்களை செலவிட்டு வருகிறார். அதோடு, இங்கு தங்கியிருக்கும் நாட்களில் தமிழ் படங்களை அதிகமாக பார்த்து ரசிக்கிறார். இதனால் எனக்கு இங்குள்ள நடிப்பு பாணியை புரிந்து கொள்ள முடிகிறது என்று சொல்லும் எமிக்கு இங்குள்ளவர்கள் பதினாறு முழம் சேலையால் உடம்பை பொதிந்து கொண்டு நடிப்பதுதான் ரொம்ப ஆச்சரியமாக உள்ளதாம்.
எப்படித்தான் இப்படி உடம்பை போர்த்திக்கொண்டு இவர்களால் நடிக்க முடிகிறது என்று கேட்பவர், என்னால் இந்த மாதிரியெல்லாம் நடிக்க முடியாது. நான் பிறந்து வளர்ந்ததில் இருந்தே ஆப்பேண்ட்-டீசர்ட் என்றுதான் அணிந்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் நான் நடித்த ஹாலிவுட் படங்களில் டூபீஸ் உடைகளிலும் காத்தாட நடித்திருக்கிறேன் என்று சொல்லும் எமிஜாக்சன், தமிழிலும் ஹாலிவுட் பாணியில் நடிக்கத்தான் ஆசைப்படுகிறாராம். ஆனால் இயக்குனர்கள்தான், இது ஹாலிவுட் படமல்ல, கோலிவுட் படம் என்று சொல்லி எமிக்கு கட்டுப்பாடு விதிக்கிறார்களாம். இருப்பினும் தற்போது நடித்து வரும் ஷங்கரின் ஐ படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஹாலிவுட் பாணியில் கவர்ச்சி அட்டகாசம் செய்திருக்கிறாராம் எமி.