கமல் பாடலுடன் துவங்கிய கீரவாணி : ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி | அனந்தா திரை படைப்பல்ல... இறை படைப்பு : பா.விஜய் நெகிழ்ச்சி | பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் | கடந்த வாரம் ரிலீசான படங்களின் வரவேற்பு எப்படி? | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் | அமலாக்கத்துறைக்கு வந்த ஸ்ரீகாந்த்: 10 மணி நேரம் விசாரணை | 70 கோடி வசூலித்த 'பைசன்' | பிளாஷ்பேக் : 18 வயதில் இயக்குனரான சுந்தர் கே.விஜயன் | பிளாஷ்பேக் : 22 மொழிகளில் சப் டைட்டில் போடப்பட்ட முதல் தமிழ் படம் |
பிரபல பட அதிபர் ஏ.எம்.ரத்னத்தின் வாரிசும், கேடி, எனக்கு 20 உனக்கு 18 படங்களின் இயக்குனருமான ஏ.எம்.ஜோதிகிருஷ்ணா, திரைக்கதை எழுதி இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடிக்கும் படம் ஊலலலா. இவர் கேடி படத்தின் மூலம் தமன்னா மற்றும் தெலுங்கு முன்னணி நடிகை இலியானா ஆகிய இருவரையும் அறிமுகம் செய்து வைத்தனர். இது மட்டுமல்லாமல் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் ஸ்ரேயாவையும் அறிமுகப்படுத்தினார். தற்போது, அவர் ஹீரோவாக நடித்து வரும் ஊலலலா படத்தில், தான் அறிமுகப் படுத்திய நாயகிகளில் ஒருவரை ஜோடியாக்க ஆசைப்பட்ட ஜோதிகிருஷ்ணா, தமன்னா மற்றும் இலியானாவிடம் சென்றுள்ளார். ஆனால், அந்த நாயகிகளே ஜோதிகிருஷ்ணாவுக்கு அப்பாய்ன்மென்ட் குடுக்காமல் எஸ்கேப்பாகி விட்டனர். திரும்பி கூட பார்க்காத அந்த நாயகிகளால் கோபமடைந்த ஜோதிகிருஷ்ணா, எங்கே ஸ்ரேயாவும் இதே போல செய்து விடுவாரோ என்று அவரை பார்க்கவே இல்லையாம்! இதனை தொடர்ந்து தான் ஜோதிகிருஷ்ணாவுக்கு மும்பையை சேர்ந்த ப்ரீத்தி பண்டாரி ஊலலலா படத்தில் ஜோடியாக அறிமுகப் படுத்தி உள்ளனர். தான் நடிகராக தம்பி ரவிகிருஷ்ணாவை மறந்த ஜோதிகிருஷ்ணாவை இநத நாயகிகள் மறப்பதில் தப்பில்லை!