Advertisement

சிறப்புச்செய்திகள்

விஸ்வரூபம் சினிமாவிற்கு ஏற்பட்டுள்ள கதி!!

06 பிப்,2013 - 16:50 IST
எழுத்தின் அளவு:

நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடிகர் கமல் எழுதி இயக்கியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கான எதிர்ப்பு ஆரம்பம் முதலே கடுமையாக இருந்துவரும் நிலையில்,தடை பல கடந்து இன்று(பிப்-7ம் தேதி) வரப்போகிறது என்ற நிலையில் தெருத்தெருவாக விஸ்வரூபம் திரைப்பட சிடியை பத்து ரூபாய்க்கும்,ஐந்து ரூபாய்க்கும் விற்றுக்கொண்டிருக்கின்றனர்.

இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் சென்சார் செய்யப்படாத சி.டி.,என்று வேறு சொல்லி கொடுக்கின்றனர். சி.டி.,கொடுப்பவர்கள் பணத்தை குறிவைத்து கொடுக்கவில்லை, இது பலருக்கும் போய்ச்சேரவேண்டும் தியேட்டருக்கு வருபவர்கள் கூட்டத்தை குறைக்கவேண்டும் என்பதே நோக்கமாக இருந்துள்ளது

இந்த படம் வெளியாவது தள்ளிப்போகும் ஒவ்வொரு நாளும் நான் ஒரு சொத்தை இழந்து கொண்டிருக்கிறேன் என்று கமல் உருக்கமாக சொன்னபிறகும் கூட திரைப்படம் வெளியாகிவிடக்கூடாது என்பதற்காக செயல்பட்ட குழு அப்படியே திரைப்படம் வெளிவந்தாலும் அது ஒடக்கூடாது என்பதற்காக இந்த மட்டமான காரியங்களில் இறங்கியுள்ளனரா என்பதில் சந்தேகம் உள்ளது

பவர்ஸ்டார் நடித்துள்ள கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் வெளிவந்து பல நாளான பிறகும் வெளிவந்துள்ள சி.டி.,யை பிடித்ததாக இரண்டு நாளாக போலீசார் செய்தி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.,ஆனால் கண்எதிரே இன்னும் வெளிவராத விஸ்வரூபம் பட சி.டி., சூரையிடுவது போல விநியோகிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இவ்வளவையும் தாண்டி தியேட்டர்களில் படம் ஒடுவது என்பது இறைவனின் கையில்தான் உள்ளது,கமல் பாணியில் சொல்வதானால் இயற்கையின் கையில் உள்ளது.


அமெரிக்காவின் தலைநகரான நியூயார்க்கை நிர்மூலமாக்கும் பயங்கர வெடிகுண்டை, வெடிக்கவிடாமல் தடுக்க ,உயிரை பணயம்வைத்து போராடும் வீர,தீரமிக்க இந்தியனின் கதைதான் விஸ்வரூபம். கதையும்,கதை சொல்லும் பாணியும் மிக ஹைடெக்காக இருக்கிறது. ஆனால் கமல் ரசிகர்களுக்கே ஒரு முறைபார்த்தால் படம் புரியாது என்பது மட்டும் உண்மை. அதே நேரம் கதக் நடன கலைஞராக கமல் வரும்காட்சி,எதிரிகள் முகாமில் நடத்தும் சண்டைக்காட்சி ஆகிய இரண்டு காட்சிகளுக்காக மட்டுமே கமல் ரசிகர்கள் இந்த படத்தை பல முறை பார்ப்பார்கள்

கதைக்களம்,நடிகர்கள் தேர்வு,மேக்கப்,லொக்கேஷன்,இசை,கேமிரா என்று ஒவ்வொரு காட்சியிலும் கடுமையாக உழைத்துள்ள கமல் கதையை எளிமையாகவும்,கோர்வையாகவும் சொல்லத் தவறிவிட்டார்.

நியூகிளியர் சிஸ்டம் புரிந்தால்தான் படம் புரியும் ஆனால் படம் பார்ப்பவர்கள் ஒரு சதவீதம் பேருக்காவது இந்த நியூகிளியர் பற்றி புரியுமா என்பது சந்தேகமே.

படத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரை குண்டு வெடித்துக்கொண்டே இருக்கிறது.,இதற்குதான் அதிகம் செலவானதோ

படத்தில் ஆன்ட்ரியா ஒரு வசனம் பேசுவார், இங்கே எல்லாமே டபுள் ரோல்தான் என்று அதென்னவோ நிஜம்தான் படம் முடிந்தபிறகுகூட படத்தில் கமல் கேரக்டர் என்ன என்பது புரியாமலே உள்ளது.

ஆனால் ஒன்று நிச்சயம், நாலு பைட்,எட்டு காமெடி,இரண்டு டான்ஸ் என்று பொழுதுபோக்கு வரிசையில் இடம் பெறும் படங்கள் வரிசையில் இந்த படத்தை நிறுத்திப்பார்க்க முடியாது,கூடாது.

ஹாலிவுட் தரத்தில் அல்ல ஹாலிவுட் படமாகவே எடுத்து இருக்கிறார்.வித்தியாசமான படம் பார்க்க விரும்பும் ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம் .

இறுதியாகவும்,உறுதியாகவும் ஒரு வேண்டுகோள் இந்த படத்தை பார்ப்பவர்கள் தயவுசெய்து தியேட்டரில்தான் போய் பார்ப்பேன் என்று முடிவு செய்துகொள்ளுங்கள்,அது கமல் போன்ற வித்தியாசமான கலைஞனுக்கு செய்யும் உதவி மட்டுமல்ல உலகத்தரத்திற்கு தமிழ் படம் போவதற்கும் செய்யக்கூடிய உதவியாகும்.

Advertisement
பரபரப்புக்காக நிர்வாணமாக நடிக்கவில்லை: பிரகாஷ்ராஜ்பரபரப்புக்காக நிர்வாணமாக ... குத்துப்பாட்டுக்கும் இனி ஏ சான்று தான்! தணிக்கை துறை அதிரடி குத்துப்பாட்டுக்கும் இனி ஏ சான்று ...

வாசகர் கருத்து

சுஜாதா - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10 பிப்,2013 - 11:56
 சுஜாதா விஸ்வருபம் ஒரு புச்வருபம்
அப்துல் ரஹ்மான் - chennai,இந்தியா
08 பிப்,2013 - 11:19
 அப்துல் ரஹ்மான் ஆஸ்கர் நிச்சயம், ஏனென்றால் அமெரிக்காவின் அடாவடிக்கு தெற்கு ஆசியாவிலிருந்து ஓர் ஆதரவு குரல், இதற்காகதானே ஆசைபட்டாய் அமெரிக்கவின் அடிவருடியே ?
JHON, IBRAHIM, MUDHUKUMAR, - chennai,இந்தியா
08 பிப்,2013 - 10:25
 JHON, IBRAHIM, MUDHUKUMAR, கமல் அவர்களே… உங்கள் வயிற்று பிழைப்புக்காக கோடிக்கணக்கான மக்கள் பின்பற்றும் மார்க்கத்தை பயன்படுத்தாதீர்கள் இது எங்களுடைய தாழ்மையான வேண்டுகோள்.
Ram saran - chennai,இந்தியா
08 பிப்,2013 - 08:57
 Ram saran முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருந்தால் இந்த படம் இரண்டு வாரம் கூட ஓடுமா என்பது சந்தேகமே, “பணம் வேஸ்ட்”
முத்துகுமார் - New York,யூ.எஸ்.ஏ
08 பிப்,2013 - 02:37
முத்துகுமார் "அமெரிக்காவின் தலைநகரான நியூயார்க்கை " - ????? அப்போ இந்திய தலைநகர் சென்னை போல.
Raja - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08 பிப்,2013 - 00:10
 Raja என்ன உலகத்தரம், படத்தில இந்தியா சம்பந்தமான காட்சிகளே இல்லனா உலக தரமா? இந்தமாதிரி 100 படம் இருக்கு ஹோலிவூட்ல... ஆனா தமிழ் நாட்டுக்காரங்களுக்கு இது புதுசு. தரம் என்றல் என்ன அதை யாரும் நிர்ணயிக்க முடியாது, உலக மக்களால் அதிகமாக ரசிக்கப்படுவது எதுவானாலும் உலகதரமே. விஸ்வரூபம் படம் தமிழர்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு தமிழ் படம். அமெரிக்கர்களுக்கு ஜால்ரா அடிக்க எடுக்கப்பட்டதும் கூட.
மகேஷ் - madurai,இந்தியா
07 பிப்,2013 - 14:22
 மகேஷ் i have saw the movie...it has good movie.....don't miss it...
MUTHARASAN - Trivandrum,இந்தியா
07 பிப்,2013 - 13:33
 MUTHARASAN ஒரு புதிய முயற்சி கமல் சார் இது போல இன்னும் நீங்கள் விதயாசமான படங்களை எடுக்க வேண்டும் உங்களுடைய நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது.எல்லோரும் திரைஅரங்குகளில் மட்டுமே பார்க்க வேண்டும் இது போல படங்கள் எடுப்பது உங்களுக்கு மட்டும் பெருமை அல்ல எல்லா தமிழனுக்கும் பெருமை ஜெயஹிந்த்
karthik - chennai,இந்தியா
07 பிப்,2013 - 12:56
 karthik வெற்றி வெற்றி விஸ்வரூப வெற்றி . கமல் இச் கிரேட்
அருண் - kancheepuram,இந்தியா
07 பிப்,2013 - 12:45
 அருண் விஸ்வருபம் நால்லா இருக்கிறது.
Rahman - Abudhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
07 பிப்,2013 - 12:07
 Rahman விஸ்வரூபம் படம் சூப்பர் இது தமிழ் படம் தானா? ஒன்னுமே புரியல சாமி என்னதான் பா படத்துல சொள்ளவரிங்க இந்த படம் தமிழ்நாட்ல அதிகமா ஒடுசினா தமிழ்நாட்டு மக்கள மாதிரி வேற முட்டாள் வேற எங்கும் இல்லன்னுதான் அர்த்தம் அப்பு ரசிகர் எல்லாரும் கண்டிப்பா தேடார் ல பாருங்க பாவம் கமல் இந்த படம் ஒடலன நடுரோட்ட்கு வந்துடுவாரு
newsreader - fahaheel,குவைத்
07 பிப்,2013 - 12:02
 newsreader அலெக்ஸ் பாண்டியன் போன்ற டாப் கிளாஸ் படங்கள் தமிழ் பட உலகை இன்னும் பல படிகள் மேலே கொண்டு செல்ல முற்படும்போது விஸ்வரூபம் போன்ற படங்கள் அந்த முயற்சியை முறியடிப்பது போல் உள்ளதே.... வேட்டைக்காரன், சுறா போன்ற படங்களின் வரிசையில் மேலும் பல படங்கள் வந்து தமிழ் திரையுலகத்தின் தரத்தை மென்மேலும் உயர்த்த வாழ்த்துக்கள்...
saminathan - chennai,இந்தியா
07 பிப்,2013 - 11:45
 saminathan எல்லாவற்றிகும் மத சாயம் பூசகூடது, மிகவும் நல்ல படம், தியேட்டர் போய் பாருங்கள்,
பாலா - bangalore,இந்தியா
07 பிப்,2013 - 11:40
 பாலா யாரும் கவலை படவேண்டாம் இன்னும் 3 மாசத்தில் விஜய் டிவில போடுருவான்
விவேக் - madurai,இந்தியா
07 பிப்,2013 - 11:22
 விவேக் கண்டிப்பா தியேட்டருக்கு தான் போய் பார்போம் .
kramkumar - chennai,இந்தியா
07 பிப்,2013 - 10:43
 kramkumar pls watch on theatre only all my friends
ARUN - chennai,இந்தியா
07 பிப்,2013 - 10:28
 ARUN சரிக மேடம், யாரு சொன்னது கமல் இந்தியாவை பற்றி கவலை படலைனு . நீங்க இந்தியன், ஹேய் ராம் போன்ற படம் பார்க்கலை போல இருக்கு . அவர் ஒரு இந்திய கலைஞன் மட்டுமில்லை உலக கலைஞனும் கூட .
ரேகில் - tvl,இந்தியா
07 பிப்,2013 - 10:27
 ரேகில் கமல் விஸ்வரூபம் நிச்சயம் வெற்றி பெரும்
சதீஷ் குமார் - banglore,இந்தியா
07 பிப்,2013 - 10:16
 சதீஷ் குமார் வாசகர்களே. இத்தனை பேர் கருத்து எழுதியுள்ளீர்கள். படம் மிக அருமை. தயவு செய்து படத்தை தியேட்டர்கலில் சென்று பாருங்கள்.
shaam - mdu,இந்தியா
07 பிப்,2013 - 10:02
 shaam padathai theatreil parunga endru sonnathu neengal iruvarum orrey kolghai kondavarghal enbatharkakathaane"
blackcat - salem,இந்தியா
07 பிப்,2013 - 10:01
 blackcat newyork pathi edukkum pothe padam release panna mudiyala india la prachanaiya pathi eduthiruntha avalo than padam engayume release panni irrukka mudiyathu ....namma allunga valarathu namakke pidikama ippadi ella pannuranga .what a funny world
Raja - Singapore,சிங்கப்பூர்
07 பிப்,2013 - 09:55
 Raja நிச்சயமாக திரை அரங்கில் சென்று பாருங்கள் .நல்ல கலைஞனை பாராட்டுங்கள்
ராமலிங்கம் அல்லது RAMESH - TVK STREET ANNA NAGAR MADURAI,இந்தியா
07 பிப்,2013 - 09:49
 ராமலிங்கம் அல்லது RAMESH படம் நன்றாக ஓட என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் .
சரிக - new york,இந்தியா
07 பிப்,2013 - 09:18
 சரிக நியூ யார்க் தரைமட்டமவதை நினைத்து கவலை பட்ட கமல் இந்தியாவில் உள்ள எத்தனையோ முக்கிய பிரச்சினைக்காக படம் எடுத்து இருக்கலாம் .. நியூ யார்க்கிற்கு அமெரிகாவில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் .. ஆஸ்கார் வாங்குவதற்கும் அமெரிக்க விசா வாங்குவதற்கும் கவலைப்படும் கமல் இந்தியாவை பற்றி கவலை பட்டதாக தெரியவில்லை
senthil - bangalore,இந்தியா
07 பிப்,2013 - 08:58
 senthil Watch this movie in the theatres and support kamal for his hard work... Thanks friends!!!!
rajusundaram - lulasekharam .kanyakumari,பஹ்ரைன்
07 பிப்,2013 - 08:39
 rajusundaram இந்த படத்துக்கு கமல் எந்த ஆளவு உலைதுள்ளார் என்று தியேட்டார் ரில் போய் படம் பார்த்தல் புரியும்
mohaezhilan S - mysore,இந்தியா
07 பிப்,2013 - 08:36
 mohaezhilan S Please watch the world class movie in theater
ஹரிஷ்குமார் - Chennai,இந்தியா
07 பிப்,2013 - 08:14
 ஹரிஷ்குமார் படத்தை தியேட்டரில் பார்க்கவே ஆர்வமாக உள்ளேன் ... கமலுக்காக !!!!..
nayagan - tiruvarur,இந்தியா
07 பிப்,2013 - 08:13
 nayagan endha kastam naalaikku ungalukkum varum. Naaihal kuraithukondaa Erukkum, appuram kadikkum appa enna panna poringa. adhula eppava kandikkalanna ellorukkum abatthu. maadha theeviravadhihala konjam ikandichu vaippathu nallathu.
Rk - Virginia,யூ.எஸ்.ஏ
07 பிப்,2013 - 07:30
 Rk Went with the whole family and watched the movie in theatre.
வெங்கடரமணன் - chennai,இந்தியா
07 பிப்,2013 - 07:26
 வெங்கடரமணன் நான் சத்யவேடேட்டில் பார்த்தேன். ஐந்து வருடம் பிறகு பார்க்கக்கூடிய படம். நவீனம்.
venkat Iyer - nagai,இந்தியா
07 பிப்,2013 - 06:51
 venkat Iyer கமலின் படத்திற்க்கும்,அதன் தொழில்நுட்பத்திற்கும் அவரது திறமைக்கும் வாழ்த்துக்கள்.இப்பொழுது நடந்தது நாம் வணங்கும் கடவுளின் திருவிளையாடளே.ஒரு தயாரிப்பாளனின் கஷ்டம் எவ்வளவு என்பதை கமல் இப்பொழுது உணர்ந்து இருப்பார்கள் என்று நம்புகின்றேன்.எத்தனை தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்து கொண்டவர்கள்.(பெரிய தயாரிப்பாளர்-ஜி.வீ ) நடு ரோட்டுக்கு வந்தவர்கள்(சொத்து அனைத்துக்களையும் விற்று)என்பதை பலர் அறிந்து இருக்க வாய்ப்ப்பு இல்லை)தங்கப்பச்சன் கூறியதை போல பெரும் முதலீடு -60% கதாநாயகனுக்கு போய்விடுகிறது.அவர்கள் படம் ஓடவில்லை என்றால் கவலை படுவது இல்லை.இதில் ரஜினி ஒருவர் மட்டும்தான் விதிவிலக்கு. படம் ஓடவில்லை என்று தெரிந்தால் நஷ்டம் ஏற்படாதவகையில் உதவிகள் செய்ய உத்திரவாதம் அளிப்பார்.ஆனால்,என்ன மாயமோதெரியல,அவருடைய படம் மட்டும் நஷ்டம் அடைந்தது கிடையாது(கடந்த 10-வருடங்களாக).நாயகன் ஒரு அற்புதமான படம்.ஆனால், கமலினால்,தயாரிப்பாளர்,தேவையற்ற செலவுகளை பெற வேண்டிய நிலை ஏற்பட்டு ,படம் வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.அப்பொழுது தயாரிப்பாளர் எவ்வளவு வேதனை பட்டிருப்பார் என்று கமல் உணர்ந்திருப்பாரா?.கமல் நடிப்பில் மிக நல்ல கலைஞன்.ஆனால்,அவரின் பலவினங்கள் பற்றி( தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் -மற்றவர்களின் கஷ்டங்களைப்பற்றி உண்ரக்கூடிய சக்தியத்தான்).ரஜினி தனக்கு என்ற குடும்பம் என்று ஆன பிறகு, அவருடைய எண்ணங்கள் மலை அளவுக்கு உயர்ந்ததை கண்டு கமலே ஆச்சரியப்பட்டு பேசியிருக்கிறார்.சமுதாயத்தின் உணர்வுகளை 100% ரஜினி உணர்ந்தவர். கமல் அதுபோல அரவணைக்க கத்துக்க வேண்டும் என்பதுதான் அவரது ரசிகர்களின் ஆசையாக இருக்கும் என்று நானும் நம்பிகின்றேன்.
prem - Gurgaon,இந்தியா
07 பிப்,2013 - 06:36
 prem குர்கான் இல் படம் சூப்பர் ஹிட்
ராம்நங்கை - india,இந்தியா
07 பிப்,2013 - 05:15
 ராம்நங்கை உங்கள் விமர்சனத்தை பார்த்தல் நீங்கள் கமல்காக பேசவில்லை போலே தெரிகிரதே என்னா நீங்க அந்த அம்மாவுக்கு சபோட் பண்ற மாதிரி இருக்கு? நல்ல படம் கொடுப்பவரை வாழ விடு.
திரை விமரிசகன் - chennai ,இந்தியா
07 பிப்,2013 - 05:06
 திரை விமரிசகன் படத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள். ஆங்காங்கே லாஜிக் இடிக்கிறது. கமல் தாளிபான்களோடு போய் சேர்வது ஒன்னாம் நம்பர் காதில் பூ வகை.பூஜா குமார் அமெரிக்கா வருவதாக இருந்தால் ஸ்டுடன்ட் விசாவில் வரலாமே? கிராபிக்ஸ் இம்சைகள் வேறு. போதாத குறைக்கு ஆண்ட்ரியாவின் கொடுந்தமிழ் கொலை. படத்தில் வெடிக்கும் குண்டுகள் நிஜத்தில் கூட அவ்வளவு வெடித்திருக்குமா என்பது சந்தேகமே. ஆரா சவுண்ட் காதை செவிடாக்க வேண்டுமானால் உதவலாம். வழக்கம் போல் கமலின் கர கர குரலின் கழுத்தறுப்பு வேறு. இந்த லட்சணத்தில் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு முறை பார்த்தால் புரியாது என்ற பில்டப் வேறு.தமிழ் ரசிகர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல; யாரையாவது தண்டிக்க வேண்டுமானால் இந்த படத்திற்கு டிக்கட் வாங்கி கொடுக்கலாம்.
நாசர் - farwaniya,குவைத்
07 பிப்,2013 - 04:36
 நாசர் கமல் இந்த படத்தை போர்க்களம் என்று வர்ணித்தார். போர்க்களத்தில் ஒப்பாரி கூடாது. மீடியாக்கள் எவ்வளவுதான் சப்பை கட்டு கட்டினாலும், மற்றவனை இழிவு படுத்துபவன் மற்றவர் முன்னால் இழிவு படுவான்.
ekambaram - aandipatti,இந்தியா
07 பிப்,2013 - 04:27
 ekambaram விஸ்வரூபம் படத்திற்கும் கமல் ஹாசனுக்கும் சம்மந்தம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் சொல்கிறார் அரசு வழகறினர்... ஜெயா டிவிக்கும் என்னக்கும் சம்மந்தம் இல்லை என சொல்லுகிறார் தமிழகத்தில் எல்லாவற்றிற்கும் மேலானவர்..... DTH மற்றும் Satellite ... உரிமை கிடைக்கவில்லையே என்ற கோபத்தில் ஆளும் தரப்பினர் செய்யும் அத்துமீறல்களில் இதுயும் ஒன்று..... இதை விட இன்னும் கேவலமான காரியங்களும் செய்ய தயங்காதவர்கள் தான் இவர்கள்.... இதுதான் தமிழகத்தின் தலைஎழுத்து ....
ர.ராமகிருஷ்ணன் - singapore,சிங்கப்பூர்
07 பிப்,2013 - 04:07
 ர.ராமகிருஷ்ணன் படம் கைக்கு கிடைக்கவில்லை. தடையும் போட முடியவில்லை. வருமானத்திற்கும் வழியில்லை. விநியோகஸ்தர்களுக்கு எப்படியும் நஷ்டத்தை கொடுக்க வேண்டும். வேறு வழி.
Padappaiththiyam - puthuvai,இந்தியா
07 பிப்,2013 - 03:57
 Padappaiththiyam கமல் சாருக்காக நான் எதுவேண்டும்னாலும் செய்வேன்.இந்த மாசம் சம்பளம் வாங்கி 100 முறை தொடர்ந்து பார்க்கப் போறேன்.என் பொண்டாட்டி பிள்ளையைப் பத்தி எனக்கு கவலையில்லை.அவங்க இருந்தா இருக்கட்டும் இல்லனா மண்ணு திண்ணு சாவட்டும்.எனக்கு என் தலைவந்தான் முக்கியம். தலைவா நீ வாழ்க உனக்காக நான் தீக்குளிக்க தயாரா இருக்கேன்.
Mirugam - kaadu,இந்தியா
07 பிப்,2013 - 03:55
 Mirugam ஆல் தி பெஸ்ட் டு விஸ்வரூபம் அண்ட் கமல்.
பீட்டர் - Chennai,இந்தியா
07 பிப்,2013 - 03:46
 பீட்டர் திருட்டு CD ல படம் பார்க்க மாட்டோம் என்று சீன் போடும் மக்களே, நீங்கள் ஒரிஜினல் CD வாங்கி படம் பார்க்காமல், பாட்டு கேட்காமல் , YOUTUBE இல் மட்டும் பார்ப்பது என்ன நியாயம் ?
Ramesh Sathy - Sathyamangalam  ( Posted via: Dinamalar Android App )
07 பிப்,2013 - 03:18
Ramesh Sathy கண்டிப்பாக நாம் எல்லோரும் உறுதி்யாக இறுதி்யான முடிவு எடுக்க மாட்டோம்ல
Nanthakumar - cuddalore,இந்தியா
07 பிப்,2013 - 03:02
 Nanthakumar This is what the Tamilnadu Government called maintains law and order. When the Chief Minister was given the details for why I implemented 144 act against Viswaroopam, because of Law and order problem. Now can the CM tells our what will she take action against this thirutu CD's? Really there are so many issues and responsible for the government ex. like power cut. please look at these problems Mam,not create problems. Our peoples are watching you mam, Please be for people we be for you. Jai hind.
ஜெய - Washington DC,யூ.எஸ்.ஏ
07 பிப்,2013 - 02:42
 ஜெய அமெரிக்காவின் தலைநகரான நியூயார்க்கை நிர்மூலமாக்கும் பயங்கர வெடிகுண்டை, வெடிக்கவிடாமல் தடுக்க ,உயிரை பணயம்வைத்து போராடும் வீர,தீரமிக்க இந்தியனின் கதைதான் விஸ்வரூபம். அப்படி என்றல் வாஷிங்டன் DC என்ன நகரம் ?
கமலூடின் - toronto,கனடா
07 பிப்,2013 - 01:45
 கமலூடின் படம் பார்த்துவிட்டேன்.கமல் என்ற கலைஞனுக்கு Hats off .எத்தனை முறை பார்க்க முடியுமா அதனை முறை தியேட்டரில் பார்பேன்
சுத்தி - aani,இந்தியா
07 பிப்,2013 - 01:38
 சுத்தி ஹாலிவுட் தரத்திற்கு Hollywood இருக்கும் போது தமிழன் தரத்திற்கு ஒரு தமிழ் படம் எடுக்கலாம். ஏன் இந்த வீணான சூடு போட்டுகொள்ளுதல்? உலக தரத்திற்கு எத்தனயோ நம் படங்கள் உள்ளது. அமெரிக்க பொருளாதார போக்கிலே இந்திய படங்கள் அமைய அவசியம் இல்லை. Aura - 3 D ஒரு வியாபார வித்தை. அன்றைய நாட்களில் இளையராஜா அமைத்த இசை இன்றும் இனிமையாகத்தான் உள்ளது. ஒலி-ஒளி பாராட்ட imax சென்று அந்த தொழில் நுட்பம் கொண்டு பதிக்கப்பட்ட படைப்புக்களை பாருங்கள். இல்லையெனில் சிறிது காலம் பொறுத்திருந்தால் "திரைக்கு வந்து சில மாதங்களே ஆன... "
பழனியப்பன் - Delhi,இந்தியா
07 பிப்,2013 - 01:13
 பழனியப்பன் I took my friend to theatre to watch this movie and its very superb, only thing which hurts me that we watch this movie in HINDI (I couldn't watch in my mothertongue). I wish you all the best for my favourite actor Kamalhasan.
விருமாண்டி - மதுரை,இந்தியா
07 பிப்,2013 - 01:06
விருமாண்டி தியேட்டரில் டிக்கெட் விலையை குறைத்தால் திருட்டு விசிடி குறையும் அத செய்யுங்க மொதல்ல
Tamizhalagi - Chennai,இந்தியா
07 பிப்,2013 - 01:05
 Tamizhalagi தயவு செய்து யாரும் திருட்டு vcd யில் படம் பார்காதேர்கள்.கலைக்கும் கலைங்கனுக்கும் மரியாதை கொடுத்த இனம் நம் தமிழ் இனம்.முதல்வருக்காக நாங்கள் வெட்கி தலை குனிகிறோம்.தயவு seyth திரை அரங்க சென்று படம் பாருங்கள்.ஒரு பாத்து சதவிகிதம் கமலை அளிக்க பார்த்தல் மிதம் உள்ள தொநூறு சதவிகிதம் பேர் மனசாட்சியோடு ஒரு கலைங்கனை ,அவன்மூலம் கலையை வாழ வைப்போம்.
Carouna - Bangalore,இந்தியா
07 பிப்,2013 - 01:03
 Carouna நான் இந்த படத்தை பெங்களூரில் பார்த்தேன், படம் நன்றாக உள்ளது. அனைவரும் தயவு செய்து தியேட்டரில் பார்க்கவும். முதல் fight மிகவும் அருமை. Don 't miss it .
yuvaraja - jebelali,இந்தியா
07 பிப்,2013 - 00:03
 yuvaraja கமல் ஒரு உன்னத கலைஞன் உலக நாயகன் இந்த படம் மாபெரும் வெற்றி பெரும்
mufti - chennai  ( Posted via: Dinamalar Android App )
06 பிப்,2013 - 23:55
mufti it s hundred present correct. our ex supreem court jurg told " most of indians are fool".
Ram - bangalore,இந்தியா
06 பிப்,2013 - 23:45
 Ram i have saw the movie...it has good movie.....don't miss it...
naina - tamil nadu,இந்தியா
06 பிப்,2013 - 23:38
 naina என்ன உலகத்தரம், படத்தில இந்தியா சம்பந்தமான காட்சிகளே இல்லனா உலக தரமா? இந்தமாதிரி 100 படம் இருக்கு ஹோலிவூட்ல... ஆனா தமிழ் நாட்டுக்காரங்களுக்கு இது புதுசு. தரம் என்றல் என்ன அதை யாரும் நிர்ணயிக்க முடியாது, உலக மக்களால் அதிகமாக ரசிக்கப்படுவது எதுவானாலும் உலகதரமே. விஸ்வரூபம் படம் தமிழர்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு தமிழ் படம். அமெரிக்கர்களுக்கு ஜால்ரா அடிக்க எடுக்கப்பட்டதும் கூட.
ammaiyadimai - kodanaatu, koththadimai kuppam, vilaiyilaa kaiyuttu ,நிய்யூ
06 பிப்,2013 - 22:55
 ammaiyadimai ஆத்தாவின் ஆசியுடன் அப்பட்டமாக நடக்கும் கீழ் தொழில் பண்ணும் பொரம்போக்குகளின் செயலைவிட மோசமானது . உலக நாயகன் அரசியலுக்கு வரவேண்டும் . நாயகன் தனக்காக வாழவில்லை .தன் லட்சியத்துக்காக வாழ்பவர் நிச்சயம் தமிழகத்தை முன்னேற்ற பாதையில் இட்டுசெல்வார்.
sakthivel - kumbakonam,இந்தியா
06 பிப்,2013 - 22:47
 sakthivel படத்தை தடை செய்தவர்கள் திருட்டு cd யை தடை செய்வது தானே?
வ.kannan - arumuganeri,இந்தியா
06 பிப்,2013 - 22:44
 வ.kannan PLEASE INDINANS , ALL WILL GO THEATRE TO WATCH KAMIL VISHWAROOVAM PLEASE
MOORTHY - dindigul,இந்தியா
06 பிப்,2013 - 22:40
 MOORTHY தியேட்டரில் தான் பார்ப்பேன்
Mala - Madurai,இந்தியா
06 பிப்,2013 - 22:33
 Mala நான் ஒரு நாளும் திருட்டு விசிடி யில் இந்த படத்தை பார்க்க மாட்டேன். தியேட்டரிலும் போய் பார்க்க மாட்டேன்.
Gopi - Chennai,இந்தியா
06 பிப்,2013 - 22:25
 Gopi You are saying "இறுதியாகவும்,உறுதியாகவும் ஒரு வேண்டுகோள் இந்த படத்தை பார்ப்பவர்கள் தயவுசெய்து தியேட்டரில்தான் போய் பார்ப்பேன் என்று முடிவு செய்துகொள்ளுங்கள்,அது கமல் போன்ற வித்தியாசமான கலைஞனுக்கு செய்யும் உதவி மட்டுமல்ல உலகத்தரத்திற்கு தமிழ் படம் போவதற்கும் செய்யக்கூடிய உதவியாகும்." then why the hell you are writing movie story here.
Karthi - Surat  ( Posted via: Dinamalar Android App )
06 பிப்,2013 - 22:17
Karthi நான் கடந்த வெள்ளியன்று சூரத் குஜராத்தி்ல் பார்த்தேன். தி்னமலர் விமர்சனம் கம் செய்தி் நூறு சதம் உண்மை. கமல் ரசிகர்களாவது தி்யேட்டரில் போய் பார்த்தால்தான் படம் ஒடலாம்.
Uma Krishna - Canada,கனடா
06 பிப்,2013 - 22:11
 Uma Krishna இந்த படத்தை பார்த்த பின்னால், தமிழ் ரசிகர்களின் எதிர்ப்பாப்பு, தரம் எல்லாமே ஜெட் வேகத்தில் அதிகமாகி விடும். 2 hours மேலே உள்ள movie , 1.30 hours மாதிரி, எங்கும் தொய்வு இல்லாமல், ரொம்ப பாஸ்ட். படம் முடிந்த பிறகும், இரண்டு நாட்கள், மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருந்திச்சு. எல்லாவிதத்திலும் Technical -லாகவும், அதை சரியான இடத்தில் அளவாக use பண்ணினது, இதல்லாம் விஸ்வரூபத்தை மேலும் அழகாக ஆகிஉள்ளது. Theatre -ல் தான் அப்படத்தை பார்க்க முடியும்.
கி.சுரேஷ் - arni,இந்தியா
06 பிப்,2013 - 21:52
 கி.சுரேஷ் திரிட்டு vcd இல் படம் பார்ப்பது திருடுவதற்கு சமம் .திருட்டை எந்த மதமும் சரி என்று சொல்லவில்லை .கீதை , குர்ரான் ,பைபிள் முதலியவை திருட்டை பாவம் என்று தான் சொல்கின்றது ,திருட்டு vcd பார்ப்பவன் அந்த மதத்திற்கு எதிரானவன் .
baby - austin,யூ.எஸ்.ஏ
06 பிப்,2013 - 21:13
 baby தினமலர் இன்னைக்குதான் நல்ல விமர்சனம் குடுதுரிக்கிங்க.... குட்
Vijayan S, Mumbai - Kamothe Navi Mumbai,இந்தியா
06 பிப்,2013 - 21:10
Vijayan S, Mumbai கமலைப் போன்ற நல்ல திறமைசாலிகளை ஊக்குவிக்க வேண்டும். இறுதியாகவும்,உறுதியாகவும் ஒரு வேண்டுகோள் இந்த படத்தை பார்ப்பவர்கள் தயவுசெய்து தியேட்டரில்தான் போய் பார்ப்பேன் என்று முடிவு செய்துகொள்ளுங்கள்,அது கமல் போன்ற வித்தியாசமான கலைஞனுக்கு செய்யும் உதவி மட்டுமல்ல உலகத்தரத்திற்கு தமிழ் படம் போவதற்கும் செய்யக்கூடிய உதவியாகும். என்ற வரிகள் என் மனதை தொட்டன.
குரு இந்தியன் - BEIRUT,லெபனான்
06 பிப்,2013 - 21:05
 குரு இந்தியன் கத்தரிக்காய் முற்றினால் கடைதெருவிற்கு வந்துதானே ஆகவேண்டும் ? யார் ஒருவர் அடுத்தவரை இழிவுபடுத்த நினைக்கிறாரோ அவர் இழிவு படுவார் இது உறுதி .
தஞ்சை மன்னர் - thanjai ,இந்தியா
06 பிப்,2013 - 20:57
தஞ்சை மன்னர் டப்பா சத்தம் ரொம்ப அதிருது
ர.rajagopalan - chennai,இந்தியா
06 பிப்,2013 - 20:55
 ர.rajagopalan எத்தனை பேர் தடுத்தாலும் கமல் சாதனையை முறியடிக்க முடியாது
ரசிகன் - chennai,இந்தியா
06 பிப்,2013 - 20:53
 ரசிகன் தியேட்டர்ல போய் பாருங்கன்னு சொல்லிட்டு , நீங்க படத்தோட கதைய சொல்லிடீங்க. உங்களுக்கும் , திருட்டு சீ டீ விக்குரவனுக்கம் என்ன வித்தியாசம் ?
nagarajan - manama,பஹ்ரைன்
06 பிப்,2013 - 20:46
 nagarajan நானும் எங்கள் குடும்பமும் தியட்டரில் தான் படம் பார்போம் என்று உறுதியாக வுள்ளோம்
G .Prabakaran - Chennai,இந்தியா
06 பிப்,2013 - 20:41
 G .Prabakaran தினமலரின் நல்ல பொறுப்பான அறிவுரை. தயவு செய்து cd இல் பார்த்திருந்தாலும் இந்த படத்தை சினிமா தியேட்டர் இல் சென்று பாருங்கள்.இது போன்ற படத்தின் தொழில் நுட்பம் உணர திரை அரங்கில் காண்பதே நல்லது.
பாலமுருகன் - chennai ,இந்தியா
06 பிப்,2013 - 20:35
 பாலமுருகன் நான் பல ஆண்டுகளாக தினமலர் வாசகன். இன்று தான் முதல் முதலாக தினமலரை பாராட்ட வேண்டும் என்று மனது வந்துள்ளது.
Elango - Perth,ஆஸ்திரேலியா
06 பிப்,2013 - 20:23
 Elango படம் வெளிவராமலே விமர்சனம் தமிழ்லே அருமை. ஒரு நாளிதழே இப்படி இருந்தால் மக்களும் அரசியல் வாதிகளும் எப்படி இதை எல்லாம் படித்தல் பார்த்தல் பாரதியின் நெஞ்சு பொறுக்குதில்லையே பாடல் ஓங்கி ஒலிக்கிறது
Manjunathan - Irbid,ஜோர்டான்
06 பிப்,2013 - 20:22
 Manjunathan ப்ளீஸ் watch this movie in the theatres and support kamal for his hard work... Thanks friends!!!!
இளையராஜா - trichy ,இந்தியா
06 பிப்,2013 - 20:18
 இளையராஜா கண்டிப்பாக கமல் படத்தை தியேட்டரில் போய் பார்ப்பவனே நல்ல தமிழன்
அய்யா - Singapore,சிங்கப்பூர்
06 பிப்,2013 - 20:17
 அய்யா தினமலர் சூப்பர் ஜால்ரா. நீங்கள் இதுக்கு முன்னாடி ஹாலிவுட் படம் பார்த்திருப்பிர்களா? படம் அருமை? மட்டமான டபுள் மீனிங் புரியலையா? சவுண்ட் effect just noise.
chithra - Bangalore,இந்தியா
06 பிப்,2013 - 20:16
 chithra நான் தியேட்டரில் படம் பார்த்தேன் நன்றாக இருந்தது. ஒரு முறை பார்த்தல் மூளை உள்ளவருக்கு புரியும்
Jason - Chennai  ( Posted via: Dinamalar Android App )
06 பிப்,2013 - 20:13
Jason please don't issue any news about pirated cds in a popular newspaper likes yours,, somberigalukku idhu theriyavarum,,
ரோஹித் - chennai,இந்தியா
06 பிப்,2013 - 20:06
 ரோஹித் நீங்க பிலிம் பார்த்திங்களா சார், முழு கதையே சொல்லிட்டீங்களே அப்புறம் விஸ்வரூபம் எப்படி ஓடும்......
வினோத் - Chennai,இந்தியா
06 பிப்,2013 - 20:03
 வினோத் இந்தப் படத்தைப்பற்றிய விமர்சனத்தைவிட கடைசியாக விடுத்த வேண்டுகோள் மிகவும் பிடித்திருந்தது.
அலெக்சாண்டர் - SINGAPORE,சிங்கப்பூர்
06 பிப்,2013 - 20:00
 அலெக்சாண்டர் குட் கமெண்ட்ஸ் ! ஹர்ட் வொர்க் வில் நாட் பைல். ஆல் தி பெஸ்ட் டு கமல் அண்ட் டீம்.
கே.சுரேஷ் - Tirupur,இந்தியா
06 பிப்,2013 - 19:55
 கே.சுரேஷ் தமிழ்நாட்டில் படம் வரும் முன்பே விமர்சனம் போட்டு விட்டீர், இது மட்டும் சரியா??
நவனிதன் - Bangalore,இந்தியா
06 பிப்,2013 - 19:46
 நவனிதன் நாங்கள் பரம்பரை கமல் ரசிகர்கள். கமல் மாதிரி நடிகர்களுக்கு நான் செய்யும் மரியாதை தியேட்டர் போய் படம் பார்த்தேன்.
R.BHARANITHARAN - salem,இந்தியா
06 பிப்,2013 - 19:45
 R.BHARANITHARAN we are all waiting for this movie.super hit for this movie.
ராஜா கணபதி - chennai,இந்தியா
06 பிப்,2013 - 19:23
 ராஜா கணபதி கமல் போன்றவர்கள் கடவுளாக மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தமிழனும் கமலை கருணாநிதிக்கு பிறகு தமிழ் கடவுளாக வணங்க வேண்டும் என்பதே எனது அன்பான வேண்டுகோள்.
ராஜா - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06 பிப்,2013 - 19:15
 ராஜா என் போன்ற நாட்டு பற்று உள்ளவர்களுக்கு இந்த படமும், ஒரு வீர தமிழனின் அறிவும், மத சார்பற்ற ஒரு கலைஞனின் எண்ணமும் நிறைவேற இதுவே தருணம். ஒரு தமிழனாக தமிழ் ரசிகனாக இந்த படத்தை மற்ற நாட்டு வாசிகளிடம் என் மார் தட்டி சொல்லி கொள்வேன் இது ஒரு தமிழனின் உன்னத படைப்பு..
தேவராஜ் - chennai,இந்தியா
06 பிப்,2013 - 19:09
 தேவராஜ் நீ என்ன திரை விமர்சனம் பண்றியா இல்ல படத்தை கேலி பண்றயானு தெரியல.
ராமசாமி venkatesan - brisbane Australia,இந்தியா
06 பிப்,2013 - 19:07
 ராமசாமி venkatesan திருட்டு VCD தொழிலில் ஈடுபட்டிருப்போர் பெரும்பாலும் யார் என்று எல்லோருக்கும் தெரியும்.
Mahie - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
06 பிப்,2013 - 19:07
Mahie இந்த சிடி களை விற்பது யார் என்று அனைவருக்கும் தெரியும். இதை அரசாங்கமும் சரி அதி்காரியும் சரி, கண்டுகொள்ள மாட்டார்கள், இது இப்படியே சென்றுகொண்டிருந்தால் தமிழகத்தி்ன் அதி்கார வர்க்கமாக இந்த கும்பல் தான் இருக்க போகிறது
indiansir - chennai,இந்தியா
06 பிப்,2013 - 18:59
 indiansir சூப்பர் சார், நான் தியேட்டர்ல தான் பார்பேன்
தேவன் - kwi,இந்தியா
06 பிப்,2013 - 18:52
 தேவன் ஜெயலலிதாவுக்கு இப்போ சந்தோசமா. இததான் எதிபார்தாரோ.
saravanan - tiruppur,இந்தியா
06 பிப்,2013 - 18:48
 saravanan தமிழன் என்றும் தலை நிமிர்ந்து நடப்பான் என்றும் நான் ஒரு இந்தியன் தடைகளை வென்று சரித்தரம் படைப்பான் என் தமிழன்
tatakarthi - tamilnadu,இந்தியா
06 பிப்,2013 - 18:46
 tatakarthi தலைவன் கமலின் உன்மைக்கு நிசயம் மெகா வெற்றி தான்
இளவரசன் - chennai,இந்தியா
06 பிப்,2013 - 18:42
 இளவரசன் நான் தியேட்டர் ல தான் பார்ப்பேன்
தேவன் - kwi,இந்தியா
06 பிப்,2013 - 18:41
 தேவன் இந்த படத்த திரைஅரங்குகளில் மட்டுமே தமிழன் பார்க்க வேண்டும்
தமிழ் பேசும் ஜாதி - bangalore,இந்தியா
06 பிப்,2013 - 18:40
 தமிழ் பேசும் ஜாதி நான் இந்த படத்தை ரெண்டு தடவை பெங்களூர் ல தியேட்டர்ல பார்த்தேன் . ரொம்பவும் நல்ல படம்...தமிழன் கமலஹாசன் வாழ்க ....
kaalaiyan - kangeyam  ( Posted via: Dinamalar Android App )
06 பிப்,2013 - 18:40
kaalaiyan I support..
- dubai,இந்தியா
06 பிப்,2013 - 18:32
 ச படம் பார்க்க டிக்கெட் விலை கம்மி பண்ணுங்கப்பா. பிறகு சினிமா ஹாலுக்கு கூப்பிடுங்க....
Raj - Dammam,சவுதி அரேபியா
06 பிப்,2013 - 18:28
 Raj தினமலருக்கு கமல் எவ்வளவு கொடுத்தார்? ஏன் இந்த ஜால்ரா? கமல் ஒன்றும் பிச்சைகாரர் இல்லை. பல தயாரிப்பாளர்களை பிச்சைக்காரர்கள் ஆக்கியவர். இப்பொழுது அவர்களின் முறை.
உமர் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06 பிப்,2013 - 18:26
 உமர் இறுதியாகவும்,உறுதியாகவும் ஒரு வேண்டுகோள் இந்த படத்தை பார்ப்பவர்கள் தயவுசெய்து தியேட்டரில்தான் போய் பார்ப்பேன் என்று முடிவு செய்துகொள்ளுங்கள்,அது கமல் போன்ற வித்தியாசமான கலைஞனுக்கு செய்யும் உதவி மட்டுமல்ல உலகத்தரத்திற்கு தமிழ் படம் போவதற்கும் செய்யக்கூடிய உதவியாகும். என் பெயரிலேயே புரிந்திருக்கும் நான் யார் என்று, ஒரு இஸ்லாமியனாக நான் கமலுக்கு atharavu தெரிவித்து இறைவனிடம் வேண்டுவதோடு அவரின் உயர்வை கெடுத்தவர்க்கும் உழைப்பை உருஞ்சுபவர்க்கும் எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இஸ்லாம் என்றால் பொறுமை மற்றும் சகோதரத்துவம் என்று பொருள்படும். ஆனால் இங்கு இஸ்லாத்தின் பெயரால் நடப்பது.....?!?!?!?!
Lawrence - tirunelveli  ( Posted via: Dinamalar Android App )
06 பிப்,2013 - 18:19
Lawrence நன்றி கமல் ஒரு கடல் கட்டுபடுத்தமுடியாது
Senthil - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06 பிப்,2013 - 18:13
 Senthil I request every1 to watch this film only in theatres as the visual
ரத்தினம்.NA - TIRUPUR,இந்தியா
06 பிப்,2013 - 18:03
 ரத்தினம்.NA ஒருவரை வளர விடாமல் செய்வதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்கிறார்கள் KAMAL VISHAYATTHIL. வாழ்க தமிழ்நாடு.
சு.PAZHANI - Pune,இந்தியா
06 பிப்,2013 - 18:02
 சு.PAZHANI தயவுசெய்து தியேட்டர்ல pooi பாருங்க
மொக்கையன் - chennai,இந்தியா
06 பிப்,2013 - 18:00
 மொக்கையன் படத்தை பார்த்தவன் நு சொல்றேன் .. இவ்ளோ ஹைப் பண்ணி எதிர்பார்ப்ப எகிற வச்சி ... போய் பார்த்தா ஏமாற்றம் தான் ..... ரொம்ப ஸ்லோ ... தசாவதாரம் fast ...
ramesh - Madurai  ( Posted via: Dinamalar Android App )
06 பிப்,2013 - 17:50
ramesh கண்டிப்பா தி்யேட்டர்ல தான் பார்ப்போம்
சந்தோஷ் - Trichy,இந்தியா
06 பிப்,2013 - 17:46
 சந்தோஷ் நீங்கள் சொல்வது உண்மை தான். இதை படிக்கும் பொழுதே கவலையாக உள்ளது.கமல் போன்ற நல்ல கலைஞரை நாம் விட்டு கொடுக்க கூடாது. தமிழனுக்கு ஒரு தமிழனே துன்பம் தர கூடாது. நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கு. அதை எல்லாம் கண்டுக்காத இந்த அரசு இந்த திருட்டு vcd அ மட்டும் எப்டி கண்டுக்க போகுது. கமல் இன் இந்த படம் கண்டிப்பாக அவரை நல்ல நிலைமைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
வினோத் - salem ,இந்தியா
06 பிப்,2013 - 17:45
 வினோத் படம் மிகவும் நன்றாக உள்ளது
அ.ஆறுமுகம் - நேருநகர மதுரை  ( Posted via: Dinamalar Android App )
06 பிப்,2013 - 17:44
அ.ஆறுமுகம் இரண்டாம் தர அரசியல்வாதி்க்கும். மதங்கங்களை சுய லாபத்தி்ற்காகவே பயன்படுத்தும் இரண்டாம் தர மதவாதி்களாலும் தமிழகத்தி்ல் மட்டுமே இதுபோல் நடத்தப்படும. கண்ணை மூடிக்கோண்டால் உலகமே இருண்டு விடும் என நினைக்கும் பூனைகள் தான் இவர்கள. கமல் என்ற கலைஞன் தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் வியாபித்தி்ருபபது அறியாத அறிவிளிகள
prabhu - coimbatore,இந்தியா
06 பிப்,2013 - 17:39
 prabhu தியேட்டரில்தான் போய் பார்ப்பேன்
TV.RAVEEN - SALEM,இந்தியா
06 பிப்,2013 - 17:37
 TV.RAVEEN தயவு செய்து படத்தை சிடியில் பார்க்காதீர்கள் திரையில் பாருங்கள் நண்பர்களே படத்தின் மகிமையை
அம்சத் - Dammam,சவுதி அரேபியா
06 பிப்,2013 - 17:36
 அம்சத் என்ன உலகத்தரம், படத்தில இந்தியா சம்பந்தமான காட்சிகளே இல்லனா உலக தரமா? இந்தமாதிரி 100 படம் இருக்கு ஹோலிவூட்ல... ஆனா தமிழ் நாட்டுக்காரங்களுக்கு இது புதுசு. தரம் என்றல் என்ன அதை யாரும் நிர்ணயிக்க முடியாது, உலக மக்களால் அதிகமாக ரசிக்கப்படுவது எதுவானாலும் உலகதரமே. விஸ்வரூபம் படம் தமிழர்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு தமிழ் படம். அமெரிக்கர்களுக்கு ஜால்ரா அடிக்க எடுக்கப்பட்டதும் கூட.
வேலன் - pondicherry,இந்தியா
06 பிப்,2013 - 17:25
 வேலன் நான் தியேட்டரில் தான் படம் பார்ப்பேன். இது உறுதி.
TV.RAVEEN - SALEM,இந்தியா
06 பிப்,2013 - 17:24
 TV.RAVEEN PLEASE FRIENDS ALL WILL GO THEATRE TO WATCH PLEASE
ஆனந்த் - chennai,இந்தியா
06 பிப்,2013 - 17:21
 ஆனந்த் விஸ்வரூபம் உறுதியான வெற்றி. காய்த்த மரம் தான் கல்லடி படும். தடை பல கடந்த இப்படம் இந்த திருட்டு vcd மூலம் முடங்கும் என்ற எதிர்பார்ப்பு மிக தவறு.
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
06 பிப்,2013 - 17:13
Bhagat Singh Dasan தினமலரே, உங்கள் அனுதாபம் புரிகிறது. இவ்வளவு தடங்கல் தாண்டி இந்த படம் வெற்றி அடையவேண்டும் என்ற உங்கள் உள்ள குமுறல்கள் தெரிகிறது. முடிந்தால் படத்தினுடைய விமர்சனத்தை இன்னும் ஓரிரு நாட்களுக்கு தவிர்த்திருக்கலாம். தமிழனுக்காக தமிழ் நாளேடு தமிழ் நாட்டில் படம் வெளியாகும் வரை பொறுத்திருக்கலாம்.
பயில்வான் - mdu,இந்தியா
06 பிப்,2013 - 17:09
 பயில்வான் பாவம் கமல்
jamunabalaji - Lyon  ( Posted via: Dinamalar Android App )
06 பிப்,2013 - 17:04
jamunabalaji Very Bad Decision.!
விஜயதிராஜ் - chennai,இந்தியா
06 பிப்,2013 - 16:59
 விஜயதிராஜ் இதை யார் செய்திருப்பார்கள் என்று யூகிக்க முடிகிறது. இது போன்ற படத்தை தியேட்டர்களிலோ அல்லது DTH வசதி உள்ள LCD அல்லது LEd டிவிக்களில் பார்த்தல் மட்டுமே நன்றாக இருக்கும். அடுத்தவர் உழைப்பை திருடுவது கீழ்த்தரமான செயல். AGS மல்டிப்லெக்ஷில் படம் பார்க்க முன் பதிவு செய்துவிட்டேன். அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Urumeen
  • உறுமீன்
  • நடிகர் : சிம்ஹா
  • நடிகை : அதிதி செங்கப்பா
  • இயக்குனர் :சக்திவேல் பெருமாள்சாமி
  Tamil New Film Ko 2
  • கோ 2
  • நடிகர் : பாபி சிம்ஹா
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :சரத்
  Tamil New Film Vaigai express
  Tamil New Film Mapla Singam

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in