சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் திறப்பு | கிரிக்கெட் சூதாட்டம் : இந்தி நடிகர் கைது | வீடு திரும்பினார் டி.எம்.எஸ்! | சிங்கம்-2 ஆடியோ ரிலீஸ்: ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் | கால் கேர்ள் ஆக நடிப்பது ஏன்? சார்மி விளக்கம்!! | குஷ்பூவின் சமூக அக்கறை! | லட்சுமிராயை துரத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள்! | சோனியா அகர்வாலின் சைடு பிஸ்னஸ்! | சைவத்துக்கு மாறினார் சிம்பு! | பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்! |
அமோகா என்ற நடிகையை நினைவிருக்கிறதா? "ஜே ஜே" படத்தில் மாதவன் ரூபாய் நோட்டை வைத்துக் கொண்டு தேடித் தேடி அலைவாரே அவர்தான் அமோகா. அந்தப் படத்துக்கு பிறகு "கார்த்திகை" என்ற படத்தில்தான் நடித்தார். அப்புறம் தெலுங்கில் அமோகா ஓகோ என்று ஆனார். தமிழ் பக்கமே தலைகாட்டவில்லை. தெலுங்கில் ஓகோன்னு இருக்கும்போது இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் நெருங்கிய தோழியானர். அதன் பலனாக "சர்க்கார்" என்ற அவரது இந்திப் படத்தில் ஹீரோயின் ஆனார். பெயரையும் நிஷா கோத்தாரி என்று மாற்றிக் கொண்டார். சர்காரில் இவர் போட்ட கவர்ச்சி ஆட்டம் இந்தி நடிகைகளையே கலங்கடித்தது. பத்து படங்கள் வரைக்கும் இந்தியில் நடித்தவர் அதன் பிறகு அங்கு தாக்குபிடிக்க முடியாமல் தெலுங்கு, கன்னடம் என்று பேக்அப் ஆனார்.
தமிழில் கச்சேரி ஆரம்பம் என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடி ரீ-என்ட்ரி ஆக முயற்சித்தார் முடியவில்லை. இப்போது தன் பெயரை பிரியங்கா கோத்தாரி என்று மாற்றிக் கொண்டு படம் பேசும் என்ற படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக ஒரு மலேசிய படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். "ஓப்ஸ் கோஸா டப்பா" என்ற அந்தப் படத்தில் மலேசிய சிறப்பு புலனாய்வு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நீச்சல் உடை, முத்தக் காட்சி அத்தனைக்கும் ஓகே சொல்லியிருக்கிறார்.