பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கரண் நடித்த "மலையன்" படத்தை இயக்கியர் கோபி. மலையன் தோல்வியைத் தொடர்ந்து அவருக்கு அடுத்து படங்கள் இயக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. பல இடங்களில் முயற்சித்தும் அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் தனது மானேஜர் ஒருவரை கழற்றி விட்டுவிட்டு துணைக்கு ஆள் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார் கஞ்சா கருப்பு. அவரிடம் போய் சேர்ந்தார் கோபி. கஞ்சா கருப்புவின் மனேஜர் போலவும், உதவியாளர் போலவும் அவருடனேயே இருந்து அவரது அன்புக்கு பாத்திரமாகி. அவருக்கு ஏற்ற வகையில் ஒரு கதை தயார் செய்து அவரையே தயாரிப்பாளராகவும் ஆக்கிவிட்டார். படத்தின் பெயர் "வேல்முருகன் போர்வெல்". கருப்புதான் ஹீரோ. அங்காடி தெரு மகேஷ் இன்னொரு ஹீரோ. இருவருக்கும் ஜோடி தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
கதை இதுதான்... போர்வெல் போடும் லாரி டிரைவர் மகேஷ். அவர் ஒரு பணக்கார பெண்ணை காதலிக்கிறார். காதலியின் தாய்மாமன் போர்வெல் லாரியை பிடுங்கி வைத்துக் கொள்கிறான். போர்வெல் லாரியின் உரிமையாளர் கருப்பு, இவர்கள் இருவரும் தங்கள் குழுவுடன் சேர்ந்து லாரியையும், காதலியையும் எப்படி மீட்கிறார்கள் என்பதை காமெடியாக சொல்லும் கதை.