இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
பாலிவுட்டின் குத்தாட்ட நடிகை, மல்லிகா ஷெராவத், தன் திரைப்பட வாழ்விலேயே, மிக வித்தியாசமான ஒரு வேடத்தில், தற்போது நடித்து வருகிறார்."அங்கோலி தேவி என்ற பெயரில் தயாராகும், இந்த படம், சில ஆண்டுகளுக்கு முன், ராஜஸ்தானில் பிரபலமாக பேசப்பட்ட, பன்வாரி தேவி என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகிறது.இதுவரை நடித்த படங்களில், அரை குறை உடையுடன் ஆட்டம் போட்ட, மல்லிகா ஷெராவத், இந்த படம் முழுவதும், புடவை அணிந்து தான் நடிக்கிறார்.
இது அவருக்கு, புது அனுபவமாக இருக்கிறதாம். அவர் கூறுகையில்," இந்த படத்தில், நான் நடிப்பதாக செய்திகள் வெளியானதும், ஏராளமான மிரட்டல்கள் வந்தன. ஆனாலும், அதை பொருட்படுத்தாமல் நடிக்கிறேன். படம் முழுவதும், புடவை அணிந்து நடிப்பது, ரொம்ப வித்தியாசமான அனுபவமாக உள்ளது. புடவை, எனக்கு, வசதியான உடையாக தெரியவில்லை என்கிறார், மல்லிகா.